புதிதாக திருமணமான தம்பதிகளா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!

புதுமண தம்பதிகளாக இருப்பவர்களுக்கும், புதுமண தம்பதிகளாக மாறப்போகிறவர்களுக்கும் இங்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவுரைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் உங்கள் உறவு சிறப்பாக அமையும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 20, 2022, 11:34 AM IST
  • திருமணம் அனைவரது வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.
  • பலருக்கு புதுவித வாழ்க்கை கிடைக்கிறது.
  • அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் இல்லை.
புதிதாக திருமணமான தம்பதிகளா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க! title=

இனிமேல் வரப்போகும் மாதங்கள் திருமண சீசனாகும், இந்த மார்கழி மாதம் முடிந்து தை மாதம் தொடங்கிவிட்டால் பல சுபநிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக நடைபெற தொடங்கும்.  திருமணமான அனைவருமே மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை கொண்டு செல்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.  காதலித்து திருணம் செய்தவர்கள் கூட கல்யாணத்திற்கு பிறகு பல பிரச்சனைகளால் பிரியும் நிலைக்கு கூட வந்து விடுகின்றனர், அதற்கு காரணம் நாம் கவனிக்காமல் செய்யும் சில தவறுகள் தான்.  தவறு செய்யாமல் யாரும் இருக்கமுடியாது, ஆனால் உறவில் நாம் தெரியாமல் செய்யும் சிறு தவறுகள் கூட நம் உறவை கெடுத்துவிடும் கொடிய ஆயுதமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  திருமணமான புதுமண தம்பதிகளாக இருப்பவர்களுக்கும், புதுமண தம்பதிகளாக மாறப்போகிறவர்களுக்கும் இங்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவுரைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் உங்கள் உறவு சிறப்பாக அமையும்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் ஏற்படும் பதற்றத்திற்கான காரணம்! இதை செய்யுங்கள் மக்களே

1) திருமணம் என்பது இருமணங்கள் சேர்வது மட்டுமின்றி இருதரப்பு குடும்பங்களும் ஒன்றாக இணையக்கூடிய ஒரு உன்னதமான தருணம்.  திருமணத்திற்கு பிறகு கணவன் தனது மனைவியின் குடும்பத்தினருடனும், மனைவி தனது கணவனின் குடும்பத்தினருடனும் நெருக்கம் காட்ட வேண்டும். இப்படி நீங்கள் இரு குடும்பத்தினருடனும் நல்லுறவை மேம்படுத்தினால் உங்கள் இருவருக்கிடையேயான உறவும் வலுப்படுவதோடு இரு குடும்பத்தினரின் உறவும் வலுப்பெறும்.

2)  திருமணம் செய்துவிட்டால் நமது துணையின் அனைத்து விதமான செயல்களிலும் நாம் ஈடுபட வேண்டும், நாம் தான் முடிவெடுக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.  ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு அவர்களின் வேளைகளில் ஈடுபடுவது தவறல்ல என்றாலும் உங்கள் துணையின் அனைத்து வேலைகளிலும் நீங்கள் தலையிடுவது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.  எப்போது ஒரு உறவில் இருவருக்கும் பிரைவசி என்பது முக்கியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

3) உங்களது எதிர்கால கனவு திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை உங்கள் துணையிடம் நீங்கள் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளலாம்.  எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் துணையிடம் சொல்லுங்கள். உங்களது ஆசையை உங்கள் துணையிடம் சொல்வதன் மூலம் அவர் உங்களுக்கு எல்லா சூழ்நிலையிலும் ஆதரவாக இருப்பதோடு அவரால் முடிந்த அளவு உதவியையும் உங்களுக்கு செய்வார்.

4) காதல் திருமணமாக இருந்தால் கவலையில்லை, காதல் திருமணமாக இல்லையென்றால் உங்கள் இருவரை பற்றியும் பெரிதாக உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  எனவே இது புதிய உறவு என்று தயக்கம் காட்டாதீர்கள், ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள், அப்போது தான் உங்கள் இருவருக்கும் இடையேயான உறவு பலப்படும்.  உறவில் தயக்கம் காட்டுவது உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்திவிடும்.

5) பெரும்பாலும் உறவுகள் முறிவதற்கு முதன்மையான காரணம் தம்பதிகளுக்கிடையே சரியான தொடர்பு இல்லாதது தான்.  உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க நீங்கள் விரும்பினால் உங்கள் துணையிடம் வெளிப்படையாக எல்லா விஷயத்தையும் பேசுங்கள்.  உங்கள் மனதில் உள்ள விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள், இப்படி செய்வது உங்கள் உறவை பலப்படுத்த உதவும்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News