2020-21 நிதியாண்டுக்கான வட்டியை இபிஎஃப்ஓ, பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளது, இந்த வட்டித்தொகையின் மூலம் நாட்டிலுள்ள சுமார் 6.5 கோடி பிஎஃப் கணக்குகளில் பணம் நிரம்பியுள்ளது.  இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது, பலரும் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் ஆகியுள்ளது என்பதை கண்காணிக்க தொடங்கிவிட்டனர்.  2020-21 நிதியாண்டிற்கான பிஎஃப் மீதான 8.5 சதவீத வட்டிக்கு அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது, இந்த வட்டி விகிதத்திற்கு தொழிலாளர் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் 8.5% வட்டி கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜியோ 5ஜி ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?... அசத்தும் அப்டேட்



பிஎஃப் கணக்கில் வட்டி வந்துவிட்டதா என்பதை சரிபார்க்க மொபைலில் 'EPFOHO UAN ENG' என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம் அல்லது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும் தகவல்களைப் பெறலாம்.  பண்டிகை காலம் வருகிறது என்பதால் ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை எடுக்க நினைப்பார்கள்.  இப்போது அவசர தேவையின் அடிப்படையில் 1 மணி நேரத்திற்குள்ளேயே வங்கி கணக்கில் பிஎஃப் பணம் வந்து சேர்ந்துவிடும், அதற்கான செயல்முறையை பின்வருமாறு காண்போம்.  இதனை செய்ய முதலில் www.epfindia.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் அட்வான்ஸ் க்ளைம் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -ல் லாக் இன் மூலமும் இதைச் செய்யலாம். 


ஆன்லைன் சேவைக்குச் சென்று, கிளைம் (படிவம்-31,19,10C & 10D) என்பதைக் கிளிக் செய்து, வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு சரிபார்க்கவும், பின்னர் ஆன்லைன் க்ளெய்ம் செய்ய ப்ரொசீட் என்பதை கிளிக் செய்யவும்.  அதன் பிறகு பிஎப் அட்வான்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து, பணம் எடுப்பதற்கான காரணம், டிரான்ஸ்பர் செய்ய வேண்டிய தொகை, காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் போன்றவற்றை  பதிவேற்றவும்.  அடுத்ததாக கெட் ஆதார் ஓடிபி என்பதைக் கிளிக் செய்து, ஆதார் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட ஓடிபியை டைப் செய்த, ஒரு மணி நேரத்தில் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.


மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விதிகளில் மாற்றம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ