Akshaya Tritiya Gold Offers: இந்த முறை அட்சய திருதியை அன்று நீங்கள் தங்க நகைகளை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான தகவல் இது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாளில் நீங்கள் இலவச தங்கத்தை பெறலாம். ஆம்... இலவச தங்கம் பெற உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அட்சய திருதியையை முன்னிட்டு தனிஷ்க், மலபார் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. செய்கூலியில் இருந்து தங்க நாணயமும் இலவசமாகப் பெறுகிறீர்கள். எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு சலுகைகளை வழங்குகிறது என்பதை இதில் காணலாம்.


தனிஷ்க் 


டாடாவின் நகை பிராண்டான தனிஷ்க் இந்த முறை அட்சய திருதியையை முன்னிட்டு உங்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. செய்கூலியில் பெரும் தள்ளுபடியின் பலனைப் நீங்கள் பெறுவீர்கள். இந்நிறுவனம் தங்கம் மற்றும் வைர நகைகளின் செய்கூலி கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி அளிக்கிறது. ஏப். 14ஆம் தேதி தொடங்கிய இந்த தள்ளுபடி, வரும் ஏப். 24ஆம் தேதி வரை இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிங்க | 500 ஆண்டுக்குப் பிறகு அட்சய திருதியை அன்று குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தங்க மழை


மலபார்


மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் இந்த அட்சய திருதியைக்கு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. மலபாரில் இருந்து தங்க நாணயம் இலவசமாகப் பெறுகிறீர்கள். 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்க நகைகளை வாங்கினால், 100 மி.கி தங்க நாணயம் கிடைக்கும். ஆனால் இந்த சலுகையை வரும் ஏப். 30ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.


சென்கோ கோல்ட் & டயமண்ட்ஸ்


சென்கோ கோல்டு & டயமண்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வைர நகைகள் செய்கூலியில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இதனுடன், உங்கள் பழைய நகைகளை விற்கிறீர்கள் என்றால், அதற்கு 0% விலக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


பிசி சந்திரா ஜூவல்லர்ஸ்


பிசி சந்திரா ஜூவல்லர்ஸ் (PC Chandra Jewellers) தனது வாடிக்கையாளர்களுக்கு அட்சய திருதியை அன்று பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சந்தர்ப்பத்தில், தங்கம் வாங்குபவர்களுக்கு அனைத்து வகையான நகைகளுக்கும் செய்கூலியில் 15% தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், வைரத்திற்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஏப். 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப். 23ஆம் தேதி வரை செல்லுபடியாகும். 


மேலும் படிங்க | 125 ஆண்டுகளுக்கு பின் அபூர்வ நிகழ்வு... அட்சய திரிதியையில் பன்மடங்கு அதிகரிக்கும் பலன்கள்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ