Movie Ticket Discounts: திரைப்படங்களை திரையரங்கில் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற காலம்போய் ஓடிடி, தொலைக்காட்சி சேனல்கள் என பல்வேறு வாய்ப்புகள் ரசிகர்களுக்கு கிடைக்கின்றன. அந்த காலத்தில் திரையரங்கத்திற்கு சென்று படம் பார்ப்பது திருவிழாவுக்கு செல்வது போன்றது என 80s, 90s கிட்ஸ் தற்போது வரை கதை சொல்லிக்கொண்டிருந்தாலும், அதில் உண்மையும் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து தரப்பிலான மக்களும் ஒரே நேரத்தில், ஒரே சேவையும் நுகரும் இடமாக திரையரங்கம் திகழ்கிறது. ஆனால், தற்போது திரையரங்கிற்கு சென்று படம்பார்ப்பது மிகவும் ஆடம்பரமானதாகவும் மாறிவிட்டது தான் நிதர்சனம். படத்திற்கான டிக்கெட் விலைகள் ஒருபுறம் இருக்க, குடும்பத்துடன் சென்றால் பாப்கார்ன் உள்ளிட்ட இதர செலவுகள் பர்ஸை பதம் பார்த்துவிடுகிறது. மால்களுக்கு கூட்டிச்சென்றால் பார்க்கிங் செலவும் உங்களை கண்ணீர்விட்டு கதறவைக்கிறது. 


இவ்வளவு தடைகள் இருப்பினும் பலரும் தற்போது திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்க விரும்புகிறார்கள். வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என படங்கள் ரிலீஸான அன்றே திரையரங்கில் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் பல்லாயிரகணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகியிருந்தாலும் படத்திற்கு முதல் நாளில் கிடைத்திற்கும் வரவேற்பு அதிகமாகியுள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


மேலும் படிக்க | நகை கடன் வாங்க போறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!


ஆன்லைன் டிக்கெட்டால் நன்மையா?


இன்றைய காலகட்டத்தில் சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் சிரமத்தை தவிர்ப்பது மட்டுமின்றி, பல்வேறு நன்மைகளும் ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதில் உள்ளது. திரைப்பட டிக்கெட்டுகள் விலை உயர்ந்ததாக மக்கள் கருதினால், அவர்கள் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது சில தள்ளுபடிகளின் ஆப்ஷன்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட டிக்கெட்டுகளில் எவ்வாறு தள்ளுபடி பெறுவது என்பதை இதில் காணலாம்.


கூப்பன் கோடு


நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய திட்டமிட்டால், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் மூலம் சில தள்ளுபடிகளையும் பெறலாம். குறிப்பாக, வெவ்வேறு ஆன்லைன் தளங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூப்பன்களைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. அவர்கள் மூலம் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது தள்ளுபடி பெறலாம்.


கிரெடிட் கார்டு


கிரெடிட் கார்டு மூலம் பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, கிரெடிட் கார்டு மூலம் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் தள்ளுபடியும் பெறலாம். பல கிரெடிட் கார்டுகள் திரைப்பட டிக்கெட் புக்கிங்கில் கூடுதல் தள்ளுபடி அளிக்கின்றன. அந்த தள்ளுபடிகள் மூலமாகவும் மக்கள் தங்கள் திரைப்பட டிக்கெட்டுகளை குறைந்த விலையில் வாங்க முடியும்.


1 வாங்கினால் 1 இலவசம்


இரண்டு பேர் அல்லது இரண்டு பேருக்கு மேல் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பல நேரங்களில் இந்த ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம் மூலம் சில சிறப்பு திரைப்படங்களில் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு திரைப்பட டிக்கெட்டில் மற்றொரு திரைப்பட டிக்கெட்டை மக்கள் இலவசமாகப் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் டிக்கெட்டுகளிலும் பணத்தை சேமிக்க முடியும்.


மேலும் படிக்க | மொரு மொரு சமோசா செய்வது எப்படி...? காஜல் அகர்வாலிமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ