Hugging Benefits For Health: நாம் யாரையாவது விரும்புகிறோமோ அல்லது அவருடைய பேச்சு அல்லது நடத்தையை விரும்புகிறோமோ, அந்த நபரை கண்டிப்பாக கட்டிப்பிடிப்போம், அது இதயத்திற்கும் மனதுக்கும் அமைதியை அளிக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் பெற்றோரையோ, சகோதரனையோ, சகோதரியையோ, காதலரையோ அல்லது நண்பரையோ நீங்கள் கட்டிப்பிடிக்கும் போதெல்லாம், அன்பின் உணர்வு பன்மடங்கு அதிகரிக்கிறது. அதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஆனால் கட்டிப்பிடிப்பதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்


நெருங்கிய ஒருவரை கட்டிப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது என்று பல ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பற்றி பார்ப்போம்.


1. மனநிலை சிறப்பாக இருக்கும்


நீங்கள் சாதாரண மனநிலையில் இருந்தாலும், நெருங்கிய நபர் உங்களைக் கட்டிப்பிடித்தாலும், மனநிலை பல மடங்கு மேம்பட்டு நீங்கள் நேர்மறையாக உணர ஆரம்பிக்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களை தினமும் கட்டிப்பிடிக்க வேண்டும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், UPI பேமெண்ட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்: அதிகரித்தது வசதி


2. டென்ஷன் விலகும்


நீங்கள் ஒருவரைக் கட்டிப்பிடிக்கும் போதெல்லாம், நீங்கள் நிம்மதியாக உணர்கிறீர்கள். மேலும், பல வகையான துக்கங்களை மறந்துவிடுவீர்கள். மன ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியம். அதனால்தான் சோகமான நபரைக் கட்டிப்பிடிக்கும் போக்கு மிகவும் அதிகமாக உள்ளது.


3. இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்


கட்டிப்பிடிப்பது உடலில் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை அதிகரிக்கிறது. இது உடலுக்கு ஆற்றலைக் கொண்டு வருகிறது. உங்கள் சோர்வை நீக்குகிறது. இதனுடன் உடல் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.


4. மூளை கூர்மையாக இருக்கும்


அடிக்கடி கட்டிப்பிடிப்பவர்கள், அவர்களின் நினைவாற்றல் மேம்படும். ஏனென்றால் இதைச் செய்வதன் மூலம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். அதனால் மனதில் ஒரு நேர்மறையான விளைவு ஏற்படும். இதனால், மனம் முன்பை விட கூர்மையாக மாறும்.


மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ