Yono SBI Super Saving Days sale: Yono SBI சேல் துவங்கிவிட்டது. இந்த சேல் இன்று அதாவது பிப்ரவரி 4 தொடங்கியுள்ளது. இந்த விற்பனை பிப்ரவரி 7 வரை தொடரும். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI-யின் நான்கு நாட்களுக்கான இந்த சிறப்பு விற்பனை SBI வாடிக்கையாளர்களுக்கு பல இ-காமர்ஸ் இணையதளங்களில் தள்ளுபடியைப் பெற வாய்ப்பளிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'Yono SBI Sale’ என்ற அதன் பெயரைப் போலவே, இந்த விற்பனை சலுகையை SBI-யின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கி தளமான Yono மூலம் பெறலாம்.


இந்த விற்பனைக்கு, மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான SBI, amazon.in, சாம்சங், யாத்ரா, OYO மற்றும் பெப்பர்ஃப்ரை ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு மூலம் SBI வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்களுக்கான புக்கிங், விருப்பமான தளபாடங்கள் என பல்வேறு பொருட்கள் மற்றும் வசதிகளை மலிவு விலையில் வாங்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.


YONO SBI Super Savings Days Sale-ல் பங்கெடுத்து நீங்கள் amazon.in மூலம் வாங்கும் பொருட்களில் 20 % வரை சேமிக்கலாம். சாம்சங் மொபைல், கைக்கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 15 சதவீதம் வரை சேமிக்க முடியும். பெப்பர்ஃப்ரை-யிலிருந்து வாங்கும் பொருட்களில் கூடுதலாக 7% சேமிக்கலாம்.


யாத்ரா மூலம் புக் செய்யப்படும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளில் 10 சதவிகிதம் சேமிக்கலாம். OYO மூலம் புக் செய்யப்படும் ஹோட்டல் அறைகளுக்கான கட்டணத்தில் 50 சதவிகிதம் வரை சேமிக்கலாம்.


தங்களது இந்த சிறப்பு விற்பனை குறித்து SBI வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளித்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, "தேதிகளை நினைவில் கொள்ளவும்!! அமேசான் (Amazon), சாம்சங், யாத்ரா, ஓயோ மற்றும் பெப்பர்ஃப்ரை போன்ற சிறந்த பிராண்டுகளுக்கு பிரத்யேக தள்ளுபடியை யோனோ சூப்பர் சேவிங் டேஸ் கொண்டு வருகிறது. காத்திருங்கள்!" என்று கூறியது.


ALSO READ: இன்று முதல் LPG Cylinder விலை அதிகரித்தது: உங்கள் ஊரின் விலை விவரம் இதோ


"2021 பிப்ரவரி 4 முதல் 7 வரை, நான்கு நாட்கள் ஷாப்பிங் களியாட்டத்திற்காக தயாராக இருங்கள்!” என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


உங்கள் SBI Yono செயலியில் லாக் இன் செய்து, செயலியின் ‘shop & order’ பிரிவில் சென்று இந்த சலுகைக்கான வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


SBI பேமெண்ட் ஆப்ஷனுடன் அமேசானில் ஷாப்பிங் செய்யும்போது, இந்த இ-காமர்ஸ் (e-Commerce) இணையதளத்தில் பல வித பொருட்கள் மற்றும் சேவைகளில் நீங்கள் தள்ளுபடியைப் பெறலாம்.


அமேசானில் Yono SBI: எப்படி தள்ளுபடியைப் பெறுவது


Step 1: உங்கள் SBI Yono செயலி அல்லது வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும்.


Step 2: SBI Yono ஷாப்பிங் பக்கத்திலிருந்து amazon.in வலைத்தளத்திற்கு செல்லவும்.


Step 3: தேவையானவற்றை தேர்ந்தெடுத்து சளைக்கும் வரை ஷாப்பிங் செய்யுங்கள்.


Step 4: செக் அவுட் செய்யும்போது SBI டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / நெட் பேங்கிங் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.


Step 5: இனி உங்களுக்கு இதில் கேஷ்பேக்கும் கிடைக்கும்.


ALSO READ: Ration Card விதிகளில் பெரிய மாற்றம்: இதை செய்ய மறக்காதீர்கள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR