ஆன்மிக பயணமாக வந்துள்ளேன்.. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை: ரஜினி!
இடைவிடாத சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு ரிலாக்ஸ் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
இடைவிடாத சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு ரிலாக்ஸ் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார்.
இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.
இதையடுத்து, வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலாதிரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் நேற்று இமயமலை சென்றுள்ளார். ஏர் இந்திய மூலம் நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள் கங்கரா நகர் வந்தார். அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். அங்கு அவர் 10 நாளுக்கு மேல் தங்கியிருப்பார் என தெரிகிறது.
ஆசிரமத்தில் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலை ரஜினி சந்தித்தார். பத்திரிகையாளர்கள் யாரும் அந்த பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இன்று நிருபர்களை சந்தித்த ரஜினி, ஆன்மிக பயணமாக இங்கு வந்துள்ளேன். இந்த பயணம் சிறப்பாக உள்ளது. வழக்கத்தை விட வேறு மாதிரியாகவும், புனிதமானதாகவும் உள்ளது. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.