Agniveer Recruitment: இந்திய விமானப்படையில் பணிபுரிய ஆர்வமா? இந்த தகுதிகள் இருக்கிறதா?
IAF Recruitment 2023: இந்திய விமானப்படை `அக்னிவீர்வாயு`க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குகிறது. 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
IAF Recruitment 2023: இந்திய விமானப்படை 'அக்னிவீர்வாயு'க்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். ஆண் மற்றும் பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை இன்று (2022, அக்டோபர் 12, புதன்கிழமை) வெளியிட்ட ஒரு டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் - https://agnipathvayu.cdac.in/ மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
இந்திய விமானப்படையில் சேவையாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரிய வாய்ப்பு இது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான சில முக்கியமான விவரங்களை தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல்/கணிதம்/ஆங்கில பாடங்களுடன் கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ அல்லது டிப்ளமோவில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் மெட்ரிகுலேஷன் அல்லது இடைநிலை, மெட்ரிகுலேஷன் ஆகியவற்றில் ஒரு பாடமாக ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது
விண்ணப்பதாரர்கள் 29 டிசம்பர் 1999 முதல் 29 ஜூன் 2005க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அக்னிபாத் திட்டம்
ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்காக, 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை, இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் 'அக்னிவீரர்கள்' என அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கு ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 சதவீதம் என்ற அளவில் வீரர்கள் ராணுவத்தில் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் வேறு வேலைகளுக்கு சென்று விடலாம்.
ஜூன் மாதம், அக்னிவேர்ஸ் ஆட்சேர்ப்புக்கான முதல் அறிவிப்பை விமானப்படை வெளியிட்டது. பதிவு செயல்முறை முடிந்ததும், பதவிகளுக்கு 7,49,899 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. "கடந்த காலத்தில் 6,31,528 விண்ணப்பங்கள் வந்திருந்ததே அதிகபட்ச விண்ணப்பங்களாக இருந்தன. தற்போது, 7,49,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, இது இதற்கு முன் வந்த அனைத்து ஆட்சேர்ப்பு இயக்கங்களைவிட அதிகம்” என்று IAF தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | NCERTயில் வேலை செய்ய விருப்பமா? இந்த தகுதிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ