எவ்வளவுதான் சத்துணவாக சாப்பிட்டாலும், தூங்கினாலும் சோர்வு மட்டும் போகவே இல்லை என அங்கலாய்ப்பவர்கள் ஏராளம். சோர்வுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு என அடுக்கிக் கொண்டே போகலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக வேலை செய்பவர்களுக்கு மட்டுமல்ல சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் அடைந்து கிடக்கறவங்களுக்கும் சோர்வு வரும். அதற்கான முக்கிய காரணம் விட்டமின் டி (Vitamin D) குறைபாடு. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் டி அதிகமாகவே இருக்கும். ஆனால் மத்தவங்களுக்கு சூரிய ஒளியில இருந்துதான் இதனை பெற முடியும். 


ஏறக்குறைய 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின் டி-தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சியிலும் இதற்கு மிக முக்கிய பங்கு உண்டு. சராசரியாக இந்த வைட்டமின் டி, 30 நானோ கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இருந்தால் போதிய அளவு இல்லை என்று பொருள். 20 முதல் 29 வரை உள்ளவர்களுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கொஞ்சம் லைப் ஸ்டைலை மாற்றினாலே சரியாகிவிடும். 20 நானோ கிராமுக்கும் குறைவாக இருநதால்தான் குறைபாடு என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.


ALSO READ | Health Tip: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா?

அதிக உடல் சோர்வு, மிகவும் பலவீனமாக இருப்பது, உடல் வலி இதெல்லாம் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள். இதை சரி செய்யாவிட்டால் சர்க்கரை நோய் (Diabetes), எலும்புகள் வலுவிழப்பு, எலும்பு நோய்கள், தசைவலி, சுவாச தொற்று பிரச்னைகள், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்கின்றனர் மருத்துவர்கள்.


உணவு மூலம் குறைந்த அளவுதான் வைட்டமின் டி கிடைக்கும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். 


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை வெயில் கொளுத்தும்போது 20 நிமிடம் முதல் அரை மணி  நேரம் வெயிலில் நிற்கலாம். பால்கனி, ஜன்னலோரம் நின்று சும்மா தலைகாட்டுவதெல்லாம் போதாது. கை, கால், முகம் மட்டும் வெளியில் பட்டால் மிக குறைவாகத்தான் இந்த சத்தை கிரகிக்கும். சுமார் 70 சதவீத இந்தியர்களுக்கு இந்த குறைபாடு இருக்கு என ஒரு ஆய்வு சொல்கிறது. 


ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR