மீண்டும் சூடுபடுத்தப்பட்ட பழைய உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பழமையான உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் (Health) மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முட்டை - முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் (Egg) புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ALSO READ | அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!
உருளைக்கிழங்கு- உருளைக்கிழங்கு மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறி எனலாம். அத்தகைய சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
பீட்ரூட் - பழைய பீட்ரூட்டை உணவை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், அதில் உள்ள நைட்ரேட் அழிக்கப்படுகிறது.
சிக்கன்- பழைய சிக்கன் (Chicken) உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கீரை- பழைய கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR