பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியம். பான் கார்டு என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண்ணாகும், இதன் உதவியுடன் மக்கள் எளிதாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ( CBDT) வழிகாட்டுதல்கள் இந்த இணைப்பிற்கான காலக்கெடுவை 2023, ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த காலக்கெடு ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139AA  படி, ஜூலை 1, 2017 க்குப் பிறகு ஆதார் அட்டைக்கு தகுதியுடையவர்கள் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய விதிகளின்படி உங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விதித்துள்ள விதியின் படி, இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், அவர்களின் பான் கார்டுகள் 'செயலிழந்து' போகலாம். அதாவது செல்லுபடியாகமல் போகலாம். இதன் விளைவாக, நீங்கள் பான் கார்டு அவசியமாக தேவைப்படும், அதிக மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. இப்போது மக்கள் பான் கார்டு தொடர்பான இந்த முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.


PAN செயலிழக்கப்படும்


தற்போதைய விதிகளின்படி, உங்கள் நிரந்தர கணக்கு எண்ணையும் (PAN) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) படி, இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், அவர்களின் பான் கார்டுகள் 'செயலிழந்து' ஆகலாம். இதன் விளைவாக, நீங்கள் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அபராதம் செலுத்தாமல் இரண்டையும் இணைக்கும் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது, மக்கள் ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க முடியும்.


மேலும் படிக்க | PAN Card Limit: 2 பான் கார்ட் வைத்து இருந்தால் இவ்வளவு தண்டனையா?


வருமான வரி போர்ட்டலில் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு அபராதம் செலுத்தும் முறை


1. முதலில், https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேணடும்.


2. ஆதார் கார்டு பான் இணைப்புக் கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண் ITNS280 ன் கீழ் தொடர என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


3. இதனையடுத்து பொருந்தக்கூடிய வரியைத் (tax applicable) தேர்ந்தெடுக்கவும்.


4. பின்னர் மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 ஆகியவற்றின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்யவும்.


5. பணம் செலுத்தும் முறை அதாவது நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு என பண பரிவர்த்தனை செய்யும் முறை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.


இதனையடுத்து பான் எண்ணை ( PAN Number) உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து முகவரியைப் பதிவு செய்துவிட்டு, இறுதியில் சரியாக கேப்சாவை உள்ளிட்டு தொடரு என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது அபாரதத் தொகையை நீங்கள் எளிய முறையில் ஆன்லைன் வாயிலாக செலுத்திக்கொள்ளலாம்.


 கடைசி தேதி
அதே நேரத்தில், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவையும் சில காலத்திற்கு முன்பு வருமான வரித்துறை நீட்டித்திருந்தது. இதுவரை பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத வரி செலுத்துவோர், ஜூன் 30, 2023க்குள் பான் கார்டைச் செயலிழக்காமல் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய வருமான வரித்துறை, ஒவ்வொரு குடிமகனும் இரு அடையாள அட்டைகளையும் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.


இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் ஆதார் பான் எண் இணைப்பு விதி  தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது-
1. இந்திய குடிமக்கள் அல்லாத நபர்கள்
2. 2022-23 நிதியாண்டில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள்
3. ஜம்மு மற்றும் காஷ்மீர், மேகாலயா மற்றும் அஸ்ஸாம் குடியிருப்பாளர்கள்
4. குடியுரிமை இல்லாத இந்திய வரி செலுத்துவோர்


என்ற மேற்கூறிய இந்த நான்கு வகைகளுக்கு பான்-ஆதார் இணைப்பது தற்போது கட்டாயமில்லை.


முன்னதாக, இந்திய மக்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக 2022ம் ஆண்டு மார்ச் 31, தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (NSDL) கடந்த 2022, மார்ச் இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் படி, மக்களின் வசதிக்காக ஆதார்- பான் கார்டு இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31,2022 முதல் மார்ச் 31, 2023 வரை நீடித்து உத்தரவிட்டது. தற்போது 2023, ஜூன் 30ம் தேதி வரை மேலும் நீட்டித்துள்ளது. இருப்பினும்,  ஏப்ரல் 1, 2022 முதல் ஆதார்- பானை இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Aadhaar Card Photo Change: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ