Money Plant: உங்களின் பணம் காய்க்கும் மரமாக இருக்க சில டிப்ஸ்..!!!

வீட்டை அலங்கரிக்க பல வகையான மரங்களை நட்டு வைக்கிறோம். சில வகை செடிகள் மற்றும் மரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்மறை ஆற்றலையும் அகற்றும். அதில் ஒன்று தான் மணி ப்ளாண்ட்.
Money Plant : வீட்டை அலங்கரிக்க பல வகையான மரங்களை நட்டு வைக்கிறோம். சில வகை செடிகள் மற்றும் மரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்மறை ஆற்றலையும் அகற்றும். அதில் ஒன்று தான் மணி ப்ளாண்ட். இந்த செடியை வீட்டில் நடவு செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருஇ பல வகையான வாஸ்து குறைபாடுகள் நீங்கி வளம் ஏற்படும், குறிப்பாக நிதி நிலமை மேம்படும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி (Vastu Tips), வீட்டின் அக்னி மூலையில் வைப்பதால், அதிக பலன் கிடைக்கும் என்றும் பொருளாதார நிலைமை மேம்படும் என்று கூறப்படுகிறது. விநாயகரின் திசை தென்கிழக்கு திசை ஆகும். இந்த காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள். மணி பிளாண்ட் செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இதனால் பலன் ஏதும் இருக்காது என கூறப்படுகிறது
ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது
மேலும் மணி ப்ளாண்ட் தரையில் படராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதனை கொடொயாக படரவிட்டால், அது எவ்வளவு உயரம் படருகிறதோ, அந்த அளவிற்கு நிதி நிலைமை மேம்படும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மணி பிளாண்டிற்கு தண்ணீர் விடும் போது அதில் சிறிது பால் சேர்த்து, தண்ணீர் விட்டால். செல்வம் கொழிக்கும். இந்த செடிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் விடுவதை தவிர்க்கலாம்.
மணி பிளாண்ட் செடியை கண்ணாடி குடுவையில் வைத்தால் மிகவும் சிறப்பு. மேலும், கண்ணாடி குடுவையின் நிறம் கண்டிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. மேலும் நீங்கள் மணி பிளான்ட் வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் சிவப்பு நிறம் ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிகப்பு நிறம் அருகில் மணி பிளான்ட் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Vastu Tips: வீட்டில் இந்த செடிகள் இருந்தால் தரித்திரம் ஏற்படலாம்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR