புது டெல்லி: நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) கணக்கு வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. PNB தனது வாடிக்கையாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்து வங்கயில் சேமிப்பு கணக்கைத் தொடங்க நினைத்தால், PNB-யில் கணக்கைத் திறப்பதன் மூலம் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் வங்கியில் PNB MySalary கணக்கைத் திறக்க வேண்டும். இந்தச் சலுகையைப் பற்றி விரிவாகப் பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வசதிகள் PNB இல் கிடைக்கும்:
PNB வழங்கிய தகவலின்படி, உங்கள் சம்பளத்தை சிறப்பாக நிர்வகிக்க விரும்பினால், 'PNB MySalary Account' கணக்கைத் திறக்கவும். இதன் கீழ், யாருக்காவது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுடன் ஓவர் டிராஃப்ட் மற்றும் ஸ்வீப் வசதியும் கிடைக்கும்.


இப்படி 20 லட்சம் பலன் கிடைக்குமா?
PNB அதன் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு உட்பட பல நன்மைகளை வழங்குகிறது. ஜீரோ பேலன்ஸ் மற்றும் ஜீரோ காலாண்டு சராசரி இருப்பு வசதியுடன் PNB MySalary கணக்கைத் தொடங்கினால், உங்களுக்கு ரூ.20 லட்சம் தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, இந்தக் கணக்கைத் திறப்பதன் மூலம் உங்களுக்கு லாபமோ லாபம்.


ALSO READ |  Post Office FD: வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தபால் நிலைய முதலீடு.!!


இந்தக் கணக்கு 4 வகைகளைக் கொண்டது:
1. 'சில்வர்'  பிரிவு இதில், 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள் இடம் பெறுவார்கள். 
2. 'கோல்ட்' பிரிவு- இந்த வகையில், 25001 முதல் 75000 வரை மாதச் சம்பளம் பெறுபவர்கள் இடம் பெறுவார்கள்.
3. 'பிரீமியம்' பிரிவு- இதில், ரூ.75001 முதல் ரூ.150000 வரை மாதச் சம்பளம் பெறுபவர்கள் இடம் பெறுவார்கள். 
4. 'பிளாட்டினம்' பிரிவு - இந்த பிரிவில், 150001 ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் பெறுபவர்கள் இடம் பெறுவார்கள். 


யாருக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் தெரியுமா?
வங்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி வழங்கப்படுகிறது.
வெள்ளி பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.50,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.
 கோல்ட் பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.150000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.
பிரீமியம் பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.225000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.
பிளாட்டினம் பிரிவில் இருப்பவர்களுக்கு 300000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.


இந்த வங்கிக் கணக்கை எப்படி திறப்பது, அதன் நன்மைகளை எவ்வாறு பெறுவது போன்ற விவரங்களை www.pnbindia.in என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் முழு விவரங்களைப் பெறலாம்.


ALSO READ |  இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது - ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR