Post Office FD: வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தபால் நிலைய முதலீடு.!!

அஞ்சலகத்தில் FD கணக்கில் செய்யப்படும் முதலீட்டில், அதிக வட்டி கிடைப்பதோடு அரசாங்க உத்திரவாதமும் கிடைக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2021, 05:48 PM IST
  • இந்த அஞ்சலக திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
  • ஒரு வருடத்தில் வங்கியை விட அதிக பலன் கிடைக்கும்.
  • தபால் அலுவலகத்தில் FD கணக்கு தொடங்குவது எளிது.
Post Office FD: வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தபால் நிலைய முதலீடு.!! title=

புதுடெல்லி: சிறிய முதலீடுகளில்  பாதுகாப்பான லாபம் பெற நினைப்பவர்கள்,  தபால் நிலையத்தின் நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலகத்தில் FD (Post office fixed deposit) கணக்கை தொடக்குவதன் மூலம், வட்டியுடன் சேர்த்து பல வசதிகளைப் பெறுவீர்கள். வட்டி லாபத்துடன் அரசாங்க உத்திரவாதமும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு . இதில், நீங்கள் காலாண்டு அடிப்படையில் வட்டி வருமானம் (Post Office FD Interest Rate 2021) பெறுவீர்கள்.

தபால் அலுவலகத்தில் FD கணக்கு தொடங்குவது எளிது

தபால் அலுவலகத்தில் FD முதலீடு செய்வது மிகவும் எளிது. இந்த தகவலை இந்தியா போஸ்ட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. நீங்கள் 1,2, 3, 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் FD பெறலாம். இந்தத் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1. தபால் அலுவலகத்தில் FD முதலீட்டிற்கு மத்தியஅரசு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

2. இதில், முதலீட்டாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பானது.

3. FD ஆப்லைன் (பணம், காசோலை) அல்லது ஆன்லைன் (நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங்) மூலம் செய்யலாம்.

ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி! மீண்டும் சம்பள உயர்வு 

4. இதில் 1 FDக்கு மேல் செய்யலாம்.

5. இது தவிர, FD கணக்கு கூட்டாக  தொடங்க முடியும்.

6. இதில், 5 ஆண்டுகளுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்தால், ITR தாக்கல் செய்யும் போது வரி விலக்கு கிடைக்கும்.

7. ஒருவர் எளிதாக ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு FD ஐ மாற்றலாம்.

FD கணக்கை திறக்கும் முறை

தபால் அலுவலகத்தில் FD பெற, காசோலை அல்லது பணமாக செலுத்தி கணக்கைத் திறக்கலாம். இதில், குறைந்தபட்சம் 1000 ரூபாயில் கணக்குகளைத் தொடங்கலாம் மற்றும் அதிகபட்ச தொகையை டெபாசிட் செய்ய வரம்பு இல்லை.

எப்டியில் அதிக வட்டி கிடைக்கும்

இதன் கீழ், 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான FD முதலீட்டிற்கு 5.50 சதவீத வட்டி கிடைக்கும். அதே வட்டி விகிதம் 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD களுக்கும் கிடைக்கும். அதே நேரத்தில், 5.50 சதவிகிதம் என்ற விகிதத்தில் 3 ஆண்டுகள் வரை FD மீதும் வட்டி கிடைக்கும். 3 வருடங்கள் ஒரு நாள் முதல் 5 வருடங்கள் வரையிலான FD கணக்குகளுக்கு 6.70 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது, இங்கே நீங்கள் FD கணக்கில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

ALSO READ : 7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு, ஊதிய உயர்வுக்கு தயாராகும் அரசு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News