ATM Withdrawal: இப்போது வங்கி தொடர்பான ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இப்போது பெரும்பாலான வேலைகள் வீட்டிலேயே அமர்ந்துகொண்டு செய்யலாம். ஒருவருக்கு பணம் அனுப்பவது, ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது, காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது, கடன் வாங்குவது என எதற்கும் வங்கிக்கு செல்ல தேவையில்லை, ஆன்லைன் சேவைகள் இதற்கெல்லாம் வழங்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் பணம் எடுக்கவும் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் ஏடிஎம்கள் வந்த பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு உங்களுக்கு ஒரு ஏடிஎம் கார்டு மட்டும் போதுமானது. ஆனால் நீங்கள் ஒருவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தால், நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை உங்களுக்கு தெரியாது என்றால் இந்த விஷயத்தில் நீங்கள் முதலில் விதிகளை அறிந்து கொள்வது முக்கியம். அதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.


வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பதுதான் நடக்கும். ஆனால் அப்படிச் செய்வது சட்டவிரோதமானது என்பதை இங்கே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து வங்கிக்கு தெரிவிக்காமல் நாமினி பணம் எடுத்தாலும் அதுவும் தவறுதான் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதில் பிடிபட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளது.


மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களின் EMI இன்று முதல் உயரும் - எஸ்பிஐயின் முடிவால் அதிர்ச்சி!


விதி என்ன சொல்கிறது?


இறந்த நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால், வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன்படி, ஒருவர் இறந்த பின், அவரது சொத்துக்கள் அனைத்தையும் அவரது பெயருக்கு மாற்றிய பின்னரே, அவரது பணத்தை திரும்பப் பெற முடியும். இது குறித்து வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.


நியமன விதிகள்


மறுபுறம், நாமினி ஒருவராக இருந்தால், அவர் இறந்த நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகள் இருந்தால், நீங்கள் வங்கியில் ஒப்புதல் கடிதத்தைக் காட்ட வேண்டும், அதன் பிறகே, இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே நீங்கள் பணம் எடுக்க முடியும்.


இப்படித்தான் பணத்தை எடுக்க முடியும்


இறந்த நபரின் வங்கிக் கணக்கின் நாமினியாக நீங்கள் இருந்தால், நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், இறந்தவரின் பாஸ்புக், கணக்கின் டிடிஆர், இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும், நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | PPF - செல்வ மகள் சேமிப்பு திட்ட விதிகளில் மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ