கிரக மாற்றங்களில் மார்ச் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மார்ச் 2022 இல், 3 முக்கிய கிரகங்கள்  இடம் மாறுகின்றன. இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாத தொடக்கத்தில் புதன் கிரகம் கும்ப ராசிக்குள்  நுழைந்துள்ளது. 2022 மார்ச் 15ல் சூரியன் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார். இதற்குப் பிறகு, மாதத்தின் கடைசி நாளில் சுக்கிரன் கும்ப ராசிக்கு மாறுவார். கிரக நிலைகளில் ஏற்படும் இந்த முக்கிய மாற்றங்கள் 4 ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது.


மேஷம்:


மார்ச் மாதத்தில் நிகழும் இந்த கிரக மாற்றங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு வலுவான பண பலன்களைத் தரும். இது பொருளாதார நிலையை பலப்படுத்தும். தொழில்-வியாபாரம் இரண்டிற்கும் இது நல்ல நேரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் பெரிய ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடும். இந்த காலத்தில் எந்த வித கடினமான பணிகளையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். 


ரிஷபம்:


31 மார்ச் 2022 வரையிலான காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம். நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும். அதுமட்டுமின்றி குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பல நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நடந்து முடியும். கணவன் / மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 


மேலும் படிக்க | சூரியனின் மாற்றம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வை ஒளிரச்செய்யும், அதிர்ஷ்டம் அடிக்கும் 


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழிலில் பெரும் வெற்றியைத் தரும். வேலை செய்யும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்து அதன் மூலம் நல்ல ஆதாயத்தை அடைவீர்கள். இதற்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.


மகரம்:


மகர ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலை ராஜயோகத்தை உண்டாக்குகிறது. இந்த ராஜயோகம் பெரும் வெற்றியைத் தரும். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்கெடிங் துறையில் இருப்பவர்களுக்கு மார்ச் 31 வரையிலான நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் அதிர்ஷ்டம்: பண மழை பொழியும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR