செப். 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்..!!
செப்டம்பர் 1 முதல் பல துறைகளில் முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இவை நேரிடையாக உங்கள் செலவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது
புதுடெல்லி: அடுத்த மாதம் , அதாவது செப்டெம்பர் முதல் தேதியிலிருந்து (Changes from 1 September 2021), uங்கள் தினசரி நடவடிக்கைகள் தொடர்பான விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. EPF முதல் வாகனத்திற்கான காப்பீடு வரை பல முக்கிய விதிகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
1. PF விதிகளில் மாற்றங்கள்
செப்டம்பர் 1 முதல், உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் நிறுவனம் உங்களது வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் வரவு வைக்க முடியாது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF கணக்கு வைத்திருப்பவர்கள் 2021 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன் UAN எண்ணுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது.
2. செக் கிளியரிங் சிஸ்டத்தில் மாற்றங்கள்
காசோலை பரிவர்த்தனை (Cheque Payment) தொடர்பான விதிகளும் மாறியுள்ளன. செப்டம்பர் 1 முதல் ரூ .50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகைக்கு காசோலைகளை வழங்குவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஏனென்றால், வங்கிகள் இப்போது பாஸிடிவ் பே சிஸ்டம் (positive pay system) முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. எனினும் இந்த PPS விதி, வாடிக்கையாளர் நலனை காக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர்கள், அதிக மதிப்புள்ள காசோலைகளை வழங்கும் போது. வங்கி கணக்கு விபரம், செக்கி;ல் உள்ள் தகவல் விபரம், பரிவர்த்தனை குறியீடு, பயனாளியின் பெயரி, MICR கோட் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். கள், RBI முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
3. LPG சிலிண்டர்களின் சப்ளை நேரத்தில் மாற்றம்
செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர்களின் விலை மற்றும் விநியோக நேரம் இரண்டிலும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் நாளில், சமையல் எரிவாய் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நகரம் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் எரிவாயு விநியோக நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
4. கார் காப்பீட்டு விதிகள் மாறும்
செப்டம்பர் 1 முதல், விற்கப்படும் புதிய வாகங்களுக்கு பம்பர்-டூ-பம்பர் காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த காப்பீடு வாகனத்தின் ஓட்டுநர், பயணிகள் மற்றும் உரிமையாளருக்கு 5 வருட காலத்திற்கான காப்பீட்டுடன் கூடுதலாக இருக்கும். பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்பது அடிப்படையில் ஒரு வகை வாகன காப்பீடாகும். இது வாகனத்தின் பாகங்களின் தேய்மானம் என்பது எந்த அளவில் இருந்தாலும், முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.
ALSO READ | Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!
5. OTT தளத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கும்
இந்தியாவில் OTT இயங்குதளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான சந்தா செப்டம்பர் 1, 2021 முதல் அதிகரிக்கிறது. இனி பயனர்கள் அடிப்படை திட்டத்திற்கு ரூ.399 க்கு பதிலாக ரூ.499 என்ற அளவில் 100 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இது தவிர, பயனர்கள் ரூ.899 கட்டணத்தில் இரண்டு போன்களில் செயலியை உபயோகிக்க முடியும். மேலும், இந்த சந்தா திட்டத்தில் HD தரம் கிடைக்கிறது. இது தவிர, நீங்கள் ரூ 4,499 க்கு 4 திரைகளில் இந்த செயலியை உபயோகிக்க முடியும்.
6. அமேசான் லாஜிஸ்டிக்ஸ் செலவு அதிகரிக்கும்
டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால், லாஜிஸ்டிக்ஸ் கட்டணத்தை அமேசான் அதிகரிக்கலாம். இது செப்டம்பர் 1, 2021 முதல் அமேசானிலிருந்து பொருட்கள் வாங்கும் போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில், 500 கிராம் எடை கொண்ட பேக்கிற்கு ரூ. 58 செலுத்த வேண்டியிருக்கும். மேலும், பிராந்திய செலவு ரூ. 36.50 ஆக இருக்கும்.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
7. பல செயலிகள் மீது தடை
கூகுளின் புதிய கொள்கை 2021, செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், போலி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் செயலிகள் செப்டம்பர் 1 முதல் தடை செய்யப்படும். நீண்ட காலமாக ஆப் டெவலப்பர்களால் பயன்படுத்தப்படாத ஆப்ஸ் நீக்கப்படும் என்று கூகுள் தனது வலைதளத்தில் கூறியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரின் விதிகள் முன்பை விட கடுமையானதாக மாற்றப்படுகின்றன. மேலும், கூகிள் டிரைவ் பயனர்கள் செப்டம்பர் 13 அன்று ஒரு புதிய பாதுகாப்பு அப்டேட்டை பெறுவார்கள். இது முன்பை விட அதன் பயன்பாட்டை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும்.
8. PNB சேமிப்புக் கணக்கில் வட்டி குறையும்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) வாடிக்கையாளர் அடுத்த மாதம் முதல் குறைந்த அளவு வட்டியை பெறுவார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி, 2021 செப்டம்பர் 1, முதல் சேமிப்புக் கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கப் போகிறது. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 3 சதவீதத்தில் இருந்து 2.90 சதவீதமாக குறைக்க வங்கி முடிவு செய்துள்ளது. வங்கியின் இந்த முடிவு புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களை பாதிக்கும்.
ALSO READ | Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR