LPG விலை முதல் வங்கி சேவை கட்டணம் வரை; இன்று முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்!
இன்று, 2021-22 நிதியாண்டின் கடைசி மாதம் மஹாசிவராத்திரியில் இருந்து தொடங்கியுள்ளது. மார்ச் 1, 2022 முதல் இன்று உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம்
எல்பிஜி சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. உள்நாட்டு எல்பிஜி விலை சமீபத்திய பல மாதங்களாக மாறாமல் உள்ளது. இருப்பினும், வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்தோ அல்லது குறைந்தோ உள்ளது. இன்று அதாவது மார்ச் 1, 2022 அன்று வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.105 அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் மாற்றம்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பெரிய மாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது. Proprietary QR குறியீடு பயனர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Interoperable QR குறியீடுகளுக்குச் செல்வார்கள். இந்த பரிமாற்ற செயல்முறை மார்ச் 31, 2022க்குள் முடிக்கப்பட வேண்டும். இதனுடன், எந்தவொரு PSO வும் எந்தவொரு கட்டண பரிவர்த்தனைக்கும் புதிய தனியுரிம குறியீட்டை அறிமுகப்படுத்த கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel
இந்திய தபால் கட்டணம் விதிக்கப்படும்
தபால் நிலையத்தின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தனது டிஜிட்டல் சேமிப்புக் கணக்க்கை மூடுவதற்கான கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்கை மூட ரூ. 150 செலுத்த வேண்டும். மேலும், தனியாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த புதிய விதி மார்ச் 5, 2022 முதல் வங்கியால் செயல்படுத்தப்பட உள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விலக்கு முடிந்தது
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர்வாழ் சான்றிதழ் அல்லது ஆயுள் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 28 கடைசி நாளாகும்.
ஓய்வூதியம் தொடர்ந்து பெறுவதற்கு, ஓய்வூதியம் பெறுவோர் மார்ச் 1-ஆம் தேதிக்கு முன் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பித்திருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும், ஆனால், கொரோனா கால நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு உதவிடும் வகையில், இந்த ஆண்டு இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. காலக்கெடுவிற்கு முன் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியம் கிடைக்காது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கூட உயிர் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR