2000 ரூபாய் நோட்டு தொடர்பாக முக்கிய அப்டேட்: ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது 2000 ரூபாய் நோட்டுகள் (Rs 2000 Note Exchange Deadline Update) தொடர்பான முக்கிய தகவல்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகளில் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்குமான காலக்கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை RBI MPC Meeting) மாற்றவும், வங்கிகளில் டெபாசிட் செய்யவும் அக்டோபர் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்கு முன்னதாக இந்த காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 ஆம் தேதியாக உயர்த்தியுள்ளது. இதனிடையே கடந்த மே மாதம் 19 ஆம் தேதி நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது, அதற்கான நடைமுறைகள் மே 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வாருங்கள் இப்போது 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியதையது என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவலை ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்:
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் (RBI Governor Shaktikanta Das) முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். மே மாதம் முதல் திரும்பி வந்த 3.43 லட்சம் ரூபாய் கோடி ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக அவர் கூறினார். இப்போதும் 12 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் சந்தையில் முடக்கப்பட்டு வங்கி அமைப்புக்கு திரும்பவில்லை என்றார். வங்கிகளும் இந்த நோட்டுகளுக்காக காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய வேண்டும், இந்த தேதிக்குப் பிறகு இந்தப் பணம் என்னவாகும் என்பது மிகப் பெரிய கேள்வியாகும்.


மேலும் படிக்க | RBI Repo Rate: ரெப்போ விகிதம் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


நாளைக்கு பிறகு என்ன நடக்கும்?
அக்டோபர் 7, 2023க்குப் பிறகு, 19 ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) வெளியீட்டு அலுவலகங்களில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் நோட்டுகள் ரொக்க வைப்பு வரம்பு இருக்கும். ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில், மக்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் இந்திய வங்கிக் கணக்குகளில் எந்தத் தொகையையும் வரவு வைக்க 2000 ரூபாய் வங்கி நோட்டுகளை வழங்கலாம். இந்த நோட்டுகளை தபால் துறை மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. அதே நேரத்தில், நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க முகவர்கள், அரசுத் துறைகள் அல்லது விசாரணை அல்லது அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள பிற பொது அதிகாரங்கள், தேவைப்படும்போது, ​​எந்த அனுமதியும் இல்லாமல் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் 2000 ரூபாய் வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | உங்கள் EPFO கணக்கில் இருந்து பணத்தை எடுக்க இவை கட்டாயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ