Indian Railways: ரயில் பயணத்தில் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!!
ரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பயணம் செய்வதற்கு முன், பயணிகள் இந்த விதிகளை அறிந்து அவற்றை பின்பற்றுவது முக்கியமாகும்.
Indian Railways reservation rules: ரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, உங்களுக்கு பெர்த் தேர்வு செய்யும் வசதி கிடைக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் மனதிற்கு ஏற்ப சீட் கிடைப்பதில்லை.
இந்திய இரயில்வேயிலும் (Indian Railways) ஒவ்வொரு ரயிலிலும் குறிப்பிட்ட அளவிலான சீட்களே இருக்கின்றன. பயணிகளின் வசதிக்காக, ரயில்வே ரயில் பர்த் தொடர்பான கடுமையான விதிகளை வகுத்துள்ளது. பயணம் செய்வதற்கு முன், பயணிகள் இந்த விதிகளை அறிந்து அவற்றை பின்பற்றுவது முக்கியமாகும்.
பயணத்தின் போது நடு பெர்த் (Train Middle berth)
பயணத்தின் (Train Travel) போது பயணிகளுக்கு நடு பெர்த் கிடைத்தால், பெரும்பாலும் அவர்கள் பல முறை பல பிரசனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கீழ் பெர்த் உள்ள பயணிகள் பெரும்பாலும் இரவு வெகுநேரம் வரை அமர்ந்திருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், நடு பெர்த்தைக் கொண்ட பயணிகளுக்கு உதவ ஒரு விதி உள்ளது. பயணிகள் ரயில்வேயின் இந்த விதிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ALSO READ: Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்
நடு பெர்த்திற்கான ரயில்வேயின் விதி சற்று வித்தியாசமானது. ரயில்வேயின் இந்த விதி மிகவும் பயனுள்ளது. நீங்கள் இந்த விதிகளை அறிந்திருந்தால் உங்கள் பயணம் வசதியான பயணமாக இருக்கும். இதைப் பற்றி தெரியாததால் பலமுறை பல வசதிகளை நீங்கள் இழக்க வேண்டி உள்ளது.
நடு பெர்த்திற்கான விதிகள் (Middle berth Rules)
நடு பெர்த்தில் பயணிக்கு ஒரு பயணி, பல முறை ரயில் துவங்கிய உடனேயே பர்தை திறந்து விடுகிறார்கள். இதனால், கீழ் பெர்த்தில் உள்ள பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ரயில்வேயின் விதிகளின்படி, நடு பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தனது நடு பர்த்தில் தூங்க முடியும்.
அதாவது, ஒரு பயணி இரவு 10 மணிக்கு முன்னதாக, தனது நடு பெர்த்தை போட்டால், கீழ் பெர்த்தில் உள்ளவர்கள் அவரைத் தடுக்கலாம். அதேபோல், நடு பர்த்தைக் கொண்டிருக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு பிறகு அதை கீழே போட்டுவிட வேண்டும், இதன்மூலம், மற்ற பயணிகள் கீழ் பர்த்தில் அமர முடியும்.
சில நேரங்களில் லோயர் பெர்த்துகளில் உள்ளவர்கள் நீண்ட நேரத்துக்கு பேசிக் கொண்டு இருப்பதால், நடு பர்த்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சூழ்நிலையிலும், இரவு 10 மணிக்கு பிறகு, நடு பெர்த்தில் உள்ளவர்கள் தங்கள் பெர்த்தை போட்டுக்கொள்ள அவர்களுக்கு அனுமதி உண்டு.
இரவு 10 மணிக்கு பிறகு டிக்கெட் சோதனை செய்யப்படாது
பயணத்தின் போது, பயணச் சீட்டு ஆய்வாளர் (TTE) பயணிகளிடம் டிக்கெட் சோதனை செய்ய வருகிறார். சில நேரங்களில் அவர் உங்களை இரவில் தாமதமாக எழுப்பி உங்கள் ஐடியைக் காட்டச் சொல்கிறார். ஆனால் இரவு 10 மணிக்குப் பிறகு TTE-யும் உங்களை தொந்தரவு செய்ய முடியாது என்று ஒரு விதி உள்ளது.
TTE காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டிக்கெட்டை சரிபார்க்கும் பணியை செய்ய வேண்டும். இரவில் தூங்கிய பிறகு எந்த பயணியையும் அவர் தொந்தரவு செய்ய முடியாது. இந்த வழிகாட்டுதலை ரயில்வே வாரியமே வழங்கியுள்ளது. இருப்பினும், இரவு 10 மணிக்குப் பிறகு பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
Indian Railways:பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி, இனி ரயில்களில் இந்த முக்கிய வசதி கிடைக்காது!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR