HRA இல்லாமலேயே வீட்டு வாடகையில் வரி விலக்கு பெறலாம்: வழிமுறை இதோ
ஊழியர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80 ஜிஜி பிரிவின் கீழ் செலுத்தப்படும் வீட்டு வாடகைக்கு விலக்கு கோரலாம். இந்த விதி சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கோருவதற்கான ஏற்பாடு வருமான வரிச் சட்டம் 1961 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தகைய ஊழியர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80 ஜிஜி பிரிவின் கீழ் செலுத்தப்படும் வீட்டு வாடகைக்கு விலக்கு கோரலாம் (Tax Exemption). மேலும், இந்த விதி சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால் விலக்கின் பயனைப் பெற, சில விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்துகொள்வது அவசியமாகும். எடுத்துக்காட்டாக, பிரிவு 80 ஜிஜி-யின் கீழ் விலக்கு கோர ஒரு ஊழியர் நிதியாண்டில் HRA பெற்றிருக்கக்கூடாது.
இதுதொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த பட்டய கணக்காளர் தருண் குமார் கூறுகையில், எச்.ஆர்.ஏ-வில் விலக்கு கோரும் வரி செலுத்துவோர் பிரிவு 80 ஜி.ஜி.யின் கீழ் செலுத்தப்படும் வாடகைக்கு விலக்கு கோர முடியாது என்றார். மேலும், பிரிவு 80 ஜிஜி-யின் கீழ் விலக்கு கோருபவருக்கு நகரத்தில் எந்த வீடும் இருக்கக்கூடாது.
அலுவலகம் அமைந்துள்ள அல்லது வணிகம் மேற்கொள்ளப்படும் நகரத்தில் மனைவி, மைனர் குழந்தை அல்லது இந்து சட்டத்தின் படி, பிரிக்கப்படாத குடும்பத்தின் பெயரில் உண்மையில் எந்த வீடும் இருக்கக்கூடாது. மறுபுறம், ஒரு ஊழியர் பணிபுரியும் அதே நகரத்தில் அவருக்கு ஒரு வீடும் இருந்தால், அவர் விலக்கு கோர முடியாது.
விலக்குக்கான அனுமதி யாருக்கு கிடைக்கும்?
தான் பணிபுரியும் நகரத்தில் இல்லாமல் மற்ற நகரத்தில் வீடு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு (Private Sector Employees) விலக்குக்கான அனுமதி அளிக்கப்படும். விலக்குக்கான கட்டுப்பாடுகள் ஊழியர் பணிபுரியும் நகரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்ற நகரங்களில் ஊழியர்கள் வீடு வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.
விலக்கின் நன்மையை எப்படி பெறுவது?
வரி செலுத்துவோர் 10BA படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் இந்த விலக்கை கோர முடியும். அதே நேரத்தில், மாற்று அல்லது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ள வரி செலுத்துவோர் இந்த விலக்கை கோர முடியாது. ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் விலக்கு கணக்கிடப்படும் என்று கருதப்படுகிறது.
ALSO READ: 7th Pay Commission: டி.ஏ உயர்வையடுத்து ஊழியர்களுக்கு கிடைத்த மற்றொரு பம்பர் பரிசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR