Tax Saving Plans : 2023இல் வருமான வரியை குறைக்கணுமா... இதை பண்ணுங்க!
How To Save Income Tax : வரும் நிதியாண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
How To Save Income Tax : ஒரு நிதியாண்டின் முடிவில், வரி செலுத்தும் ஒவ்வொருவரும் வருமான வரியை செலுத்த வேண்டும். தனிநபர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி விகிதம் நபருக்கு நபர் அவர்களின் வருமானம் மற்றும் பிற தொழில் ஆதாரங்களில் இருந்து ஈட்டப்படும் லாபத்தைப் பொறுத்து மாறுபடும்.
இதேபோல், தனிநபர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி விகிதங்கள் நிறைய வேறுபாடு இருக்கும். சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வரிகளைச் செலுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவில் ITR (Income Tax Return) தாக்கல் செய்வதால், உங்கள் வரிகளைச் சேமிக்க வேண்டினால், சில முதலீட்டு வழிமுறைகளில் வரி விலக்குகள் வடிவில் அரசாங்கம் பலன்களை வழங்குகிறது. மேலும், பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின்படி பின்வரும் வழிமுறைகளின்கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கினை கோரலாம்.
மேலும் படிக்க | பெண்களுக்கு அதிக வட்டி விகிதங்களை தரும் வங்கி! எவ்வளவு தெரியுமா?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி ஒரு அற்புதமான வரி சேமிப்பு திட்டமாகும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இதனை 15 ஆண்டுகளுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தில் பெறலாம். இது வரி இல்லாதது மற்றும் ஒவ்வொரு காலாண்டிலும் அதன் (PPF) வட்டி விகிதம் மாற்றப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF)
ஊழியர் வருங்கால வைப்பு நிதி மூலமாகவும், நீங்கள் வரிகளைச் சேமிக்கலாம். இத்திட்டத்திற்கு வழங்கப்படும் சம்பளத் தொகையில் 12 சதவீத பங்களிப்பானது பிரிவு 80C-இன் கீழ் ரூ.1.5 லட்சமாக கணக்கிடப்படுகிறது.
நிலையான வைப்புத்தொகை (FD)
வரி செலுத்துவோர், இந்திய வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 80C-இன் கீழ் வரிச் சலுகையைப் பெறக்கூடிய, நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit) முதலீடு செய்வதன் மூலம் வரியைச் சேமிக்கலாம். வரி செலுத்துவோர், நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம்.
யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (ULIP)
இந்த வகையிலும், நீங்கள் வரிகளைச் சேமிக்கலாம். ULIP (Unit Link Insurance Plan) நீண்ட கால முதலீட்டுத் தயாரிப்புகளாகும், அவை பங்கு நிதிகள், கடன் நிதிகள் அல்லது இரண்டையும் தேர்வு செய்ய வரி செலுத்துவோரான உங்களை அனுமதிக்கின்றன. ULIP-இல் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவுகள் 80C மற்றும் 10(10D)ஆகியவற்றின் கீழ் நீங்கள் வரிகளைச் சேமிக்கலாம்.
மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் SBI மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ