குறைந்த முதலீட்டில் SBI மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு!

SBI ATM Franchise: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ இப்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தனது ஏடிஎம்களை அதிகரிக்கச் செயல்பட்டு வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2023, 12:22 AM IST
  • எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு விண்ணப்பிக்கும் முறை.
  • ஏடிஎம் வங்கியால் நிறுவப்படும் என்று பலர் நினைக்கிறார்கள்.
  • ஒப்பந்ததாரர்கள் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம்களை நிறுவுகின்றனர்.
குறைந்த முதலீட்டில் SBI மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு! title=

எஸ்பிஐ மிகப்பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சிறந்த வருமானத்தை சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது ஒரு வகையான தொழில். இதன் மூலம் ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். எஸ்பிஐயின் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம். SBI ATM உரிம திட்டம் தான் அது. எஸ்பிஐ வங்கி அதன் ஏடிஎம் உரிமையை வழங்குகிறது. இது ஒரு பெரிய வாய்ப்பு. இதனை எல்லோரும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ இப்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தனது ஏடிஎம்களை அதிகரிக்கச் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஏடிஎம் உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எஸ்பிஐயின் ஏடிஎம் உரிமையை எடுத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஏடிஎம் வங்கியால் நிறுவப்படும் என்று பலர் நினைக்கிறார்கள்., ஆனால் அது அவ்வாறு இல்லை. ஒப்பந்த அடிப்படையில் ஏடிஎம்களை நிறுவும் பணியை வங்கி வழங்குகிறது. ஒப்பந்ததாரர்கள் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம்களை நிறுவுகின்றனர். ஏடிஎம் நிறுவலுக்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2023-ல் நல்ல செய்தி: 10 லட்சம் வருமானத்துக்கு வரி இவ்வளவுதான், மாறுகிறது Tax Slab! 

SBI ATM உரிமத் தேவைகள்

ஏடிஎம் அமைக்க 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மற்ற ஏடிஎம்களில் இருந்து அதன் தூரம் 100 மீட்டர் இருக்க வேண்டும். இந்த இடம் மக்கள் எளிதில் அணுகும் வகையிலும், அனைவருக்கும் தெரியும் இடத்திலும் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும். இது தவிர 1 கிலோவாட் மின் இணைப்பும் அவசியம். இந்த ஏடிஎம்மின் திறன் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகளாக இருக்க வேண்டும். ஏடிஎம் மையத்திற்கு கான்கிரீட் கூரை இருக்க வேண்டும். V-SAT நிறுவ விண்ணப்பிப்பதற்கு சொஸைட்டி அல்லது சமப்ந்தப்பட்ட உரிமையாளரிடம் இருந்து நோ அப்ஜெக்‌ஷன்  சான்றிதழ் தேவை

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு விண்ணப்பிக்கும் முறை

நாட்டில் ATM உரிமையை நிறுவுவதற்கான ஒப்பந்தம் Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவற்றுடன் மட்டுமே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எஸ்பிஐ ஏடிஎம்-ன் உரிமத்தை பெற, நீங்கள் இந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு தேவையான ஆவணங்கள்

அடையாளச் சான்றிதழில், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் முகவரிச் சான்றில், ரேஷன் கார்டு, மின் கட்டணம், வங்கிக் கணக்கு, பாஸ்புக் போன்ற பிற ஆவணங்களும் அவசியம்.

எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏடிஎம் உரிமையைப் பெற, நீங்கள் ரூ. 2 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் ரூ.3 லட்சத்தின் மூலதனத்தைச் செலுத்த வேண்டும். எஸ்பிஐ ஏடிஎம் உரிமையாளர்கள் ஒரு பண பரிவர்த்தனைக்கு ரூ 8 மற்றும் பணமில்லா பரிவர்த்தனைக்கு ரூ 2 பெறுகிறார்கள். ஒரு வகையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 60000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகை வரை வருமான வரி கட்ட வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News