உலக சுகாதார மையம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் இருந்த டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது மாஸ்க் அணிந்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து உயிரைக்காப்பதற்கு தற்போதைய சூழ்நிலையில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது. கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்து சந்தைக்கு வரும் வரையில் நம்மை காப்பது முக கவசம் தான். உலக நாடுகளில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1,28,42,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் 5,67,649 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 33,55,646 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 732 பேர் உயிரிழந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,37,403 ஆக உயர்ந்துள்ளது.


இருந்தாலும் முக கவசம் அணிவது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தபோதும், நான் அதைச் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தவர் டிரம்ப்.


READ | கொரோனா வைரஸ்: தமிழகத்தில் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு....


ஆனாலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுவாக அனைத்து இடங்களிலும் முக கவசம் இல்லாமல் தான் வலம் வந்தார். செய்தியாளர்களை சந்தித்த போதும் சரி பல்வேறு ஆலோசனை கூட்டங்களிலும் சரி முக கவசம் அணியாமல் தான் இருந்தார் டிரம்ப். அப்படி முக கவசம் அணிந்தால், தமது உடல்நிலை பலவீனமாக இருப்பதாக நினைத்துவிடுவார்கள் என விளக்கம் அளித்தார். 


இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்கிற பிரசாரத்தை அமெரிக்கா படுதீவிரமாக முன்னெடுத்தது. இருப்பினும் டிரம்ப் மட்டும் முக கவசம் அணியாமல் இருந்தார். இந்த நிலையில் வாஷிங்டன் புறநகரில் ராணுவ மருத்துவமனைக்கு சென்று டிரம்ப் பார்வையிட்டார். அப்போது முதல் முறையாக டிரம்ப் முக கவசத்தை அணிந்திருந்தார். மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது மிக முக்கியமானது என விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் டிரம்ப் மிகவும் தாமதமாக முக கவசம் அணிந்திருப்பதை முன்வைத்து தற்போது விவாதங்கள் கிளப்பிவிட்டன.