உத்திர பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், சனிக்கிழமை மாலை பரேலி மாவட்டத்தில் ஃபதேஹ்கஞ்ச் பகுதியின் போலாப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வயது சிறுவன் விளையாடும் போது, தற்செயலாக ஒரு பாம்பு குட்டியை விழுங்கினான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு வயது சிறுவன் பாம்பை வாயில் போட்டுக் கொண்டு விழுங்கு போது, அவனது தாய் வாயில் ஏதோ ஒன்று இருப்பதை பார்த்து விட்டார். அதற்கு அந்த குழந்தை பாதி பாம்பை விழுங்கி விட்டது.


குழந்தையின் தாய அதை வெளியே இழுத்தபோது, விழுங்கியது ​​ஒரு பாம்பு என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
அந்த பாம்பு இறந்து விட்டது.


குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவனது பெற்றோர்.


குழந்தையின் தந்தையான தரம்பால், ஒரு விவசாயி, குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் போது, குழந்தை விழுங்கிய, அந்த ஆறு அங்குல நீளமுள்ள இறந்த பாம்பையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.


சிறுவனுக்கு விஷத்தை முறிக்கும் ஊசி போடப்பட்டதாகவும், குழந்தை அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரி ஹரிஷ் சந்திரா தெரிவித்தார்.


குழந்தை விழுங்கிய பாம்பு அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை.


மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!