பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த  போராடி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் மர்மம் குறித்து அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2020, 07:54 PM IST
  • உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் மர்மம் குறித்து அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
  • பாகிஸ்தானில் இதுவரை 2,97,512 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,335 பேர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
  • பாகிஸ்தானின் மக்கள் தொகை 22 கோடி. சுகாதார வசதிகள் மிகவும் குறைவு.
பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!! title=

பாகிஸ்தானில் நாளொன்றுக்கு 6000 என அதிகரித்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென சரிந்து செப்டெம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 300 தோற்று பாதிப்புகள் என ஆகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த  போராடி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் மர்மம் குறித்து அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சாத்தியமில்லாத விஷயம் எப்படி சாத்தியமானது என்றும், இதன் மர்மம் என்ன என்று அனைவரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுவரை 2,97,512 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,335 பேர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 8909 மட்டுமே.

பாகிஸ்தானின் மக்கள் தொகை 22 கோடி. சுகாதார வசதிகள் மிகவும் குறைவு. மக்கள் தொகை நெரிசல் மிக்க நகரங்கள் என அனைத்து விதமான நிலைமையையும் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில், ஆக்ஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவினால் 80,000 பேர் இறப்பார்கள் என கணிக்கப்பட்டது

ஆனால், இப்பொழுது பார்த்தால், நிலைமை  தலைகீழாக உள்ளது.

பாகிஸ்தானில், பரிசோதனை செய்யப்படுவபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இது தவிர, மக்கள் கொரோனா இருப்பது தெரிய வந்தால், சமூகத்தில் ஒதுக்கி விடுவார்களோ என பயந்து, வெளியில் சொல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

அதனால், பலர் உடல் நிலை மிகவும் மோசமானால் தான் வெளியே சொல்கின்றனர்.

மற்றவர்கள் வெளியில் சொல்லாமல் வீட்டிலேயே தங்களை தனிமைபடுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!

அப்படி இருந்தும் கூட, பாகிஸ்தானில் கொரோனாவினால் இறப்பவர்கள் விகிதம் 2.1 விகிதமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 1.8 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிகம் என்பதால், கொரோனா தொற்று பெரிய அளவில் அவர்களை பாதிக்கவில்லை எனவும், அவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லாததால் பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள், கொரோனா கட்டுபடுத்தி, கொரோனா இல்லை என அறிவித்த பிறகும் கூட பல நாட்கள் கழித்து, புதிய தொற்று பாதிப்புகள்  கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பும், கொரோனா தொற்று முழுமையாக விலகுவது தற்போது சாத்தியமில்லை, அது நீண்ட காலம் தொடரும் என எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | சிக்கிமில் 'ஜீரோ டிகிரி'யில் வழி தவறி தவித்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்..!!

Trending News