உலகிலேயே இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர்கள் தொகையை தாயகத்திற்கு பணம் அனுப்பி முதலிடத்தில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். 


வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம் கோடி ஆகும். சீனா 2வது இடத்தில் உள்ளது.மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது. 


கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது அதிகரித்துள்ளது.