இன்று 86வது இந்திய விமானப்படை தினம்: உ.பி.,ல் சாகச நிகழ்ச்சி!!
இந்திய விமானப்படையின் 86-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய விமானப்படையின் 86-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது. ஏப்ரல் 1933 அன்று நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை தொடங்கியது. இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.
தொடக்கத்தில் பிரித்தானியாவின் சீருடை மற்றும் முத்திரைகளையே, இந்திய விமான படையினரும் பின்பற்றினர், இரண்டாம் உலகபோரின்போது சப்பானிய பர்மா [3] படையை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்கு பின்பு, இந்திய பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக இருந்த விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக உருப்பெற்றது.
இந்நிலையில் இன்று இந்திய விமானப்படையின் 86-வது தினம் கொண்டாடப்படுகிறது. உ.பி., மாநிலம் காசியாபாத் அருகே உள்ளஹிண்டன் விமானபடை தளத்தில் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் விமானப்படையை சேர்ந்த ஜாக்குவார் , மிக்-29 மிராஜ்-2000 ,எஸ்யூ 30 எம்கேஐ பைட்டர் ஜெட் மற்றும் ருத்ரா ஹலெிகாப்டர்களும் இடம் பெற உள்ளது.