ஆஸ்திரேலிய விசா பெருவதர்க்கு இந்தியாவில் நிஜத்தில் அண்ணன், தங்கை செய்துகொண்ட திருமணம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: அவுஸ்திரேலியாவில் விசா பெற்றுக்கொள்வதற்காக அண்ணனும் தங்கையும் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டு தங்களது விவரங்களை குடிவரவு துறையிடம் சமர்ப்பித்துள்ள சம்பவம் அதிர்சியுட்டியுள்ளது. 


SBS.com.au தகவலின்படி, இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது தங்கையை திருமணம் செய்துகொண்டு போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா விசாவுக்கு சமர்ப்பித்துள்ளார்.


இந்த மோசடி இடம் பெற்றதாக கூறப்படும் பஞ்சாப் மாநிலத்தின் சிற்றூரில் பொலிசார் மேற்கொண்டவிசாரணைகளில் சுமார் ஆறுபேர் இதுபோன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களது ஒரே நோக்கம் விசா பெற்றுக்கொள்வதுதான் என தெரியவந்துள்ளது.


இதுகுறித்து அவுஸ்திரேலிய குடிவரவுதுறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் Spouse விசாவின் கீழ் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 278 என்றும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


அண்ணா சகோதரி இரட்டையர் மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர், தாய்வழி பாட்டி மற்றும் இன்னொரு சகோதரர் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களில் சுமார் 1500 விண்ணப்பங்கள் அவுஸ்திரேலிய குடிவரவு துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!.