Indian Railway: இந்திய ரயில்வே 4000+ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வே, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 4000திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Railway Recruitment 2021: இந்திய ரயில்வே, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தெற்கு மத்திய ரயில்வே 4,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் scr.indianrailways.gov.in இதற்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களின் பெயர், காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற முக்கிய விவரங்களை அறியலாம்.
Indian Railway Recruitment 2021: பதவி மற்றும் காலி பணியிடங்கள் குறித்த விபரம்
ஏசி மெக்கானிக் - 250 காலியிடங்கள்
தச்சர் - 18 காலியிடங்கள்
டீசல் மெக்கானிக் - 531 காலியிடங்கள்
எலக்ட்ரீஷியன் - 1,019 காலியிடங்கள்
மின்னணு மெக்கானிக் - 92 காலியிடங்கள்
ஃபிட்டர் - 1,460 காலியிடங்கள்
மெஷினிஸ்ட் - 71 காலியிடங்கள்
MMTM - 5 காலியிடங்கள்
MMW - 24 காலியிடங்கள்
ஓவியர் - 80 காலியிடங்கள்
வெல்டர் - 553 காலியிடங்கள்
ALSO READ | Education Loan: கல்விக்கடன் எடுப்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!
தேவையான கல்வித் தகுதிகள்
ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அக்டோபர் 4, 2021 தேதியின்படி, காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 3, 2021 (11:59 PM) வரை விண்ணப்பிக்கலாம்.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR