நியூடெல்லி: இந்திய ரயில்வே இன்று 250க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. எனவே பயணிகள் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னதாக, ரயில்களின் செல்லும் நிலவரத்தைத் தெரிந்துக் கொள்வது நல்லது. அதில் 260 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 35 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
தினசரி கோடிக்கணக்கான மக்கள் இந்தியன் ரயில்வே மூலமாக பயணங்களை மேற்கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, மக்களின் வசதியை முன்னிட்டு, ரத்து செய்யப்படும், அல்லது தாமதாக வரும் அல்லது கிளம்பும் ரயில்கள் என ரயில்களின் இயக்கம் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இதில், ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உட்பட பல பட்டியல்கள் வெளியாகின்றன. 


மேலும் படிக்க | திடீரென தீப்பற்றி எரிந்த காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் ஸ்டேஷன்! எலும்புக்கூடான பைக்குகள்


இந்த ரயில்வே பட்டியலில், பல்வேறு மாநிலங்களைக் கடந்து வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களின் பட்டியல் அனைவராலும் அதிகமாக பார்க்கப்படுகிறது.


இன்று, அதாவது 2022 டிசம்பர் 18ம் தேதி வெளியான இந்தியன் ரயில்வேயின் பட்டியலில்,  260 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 35 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் என அதிக அளவில் வட மாநில ரயில் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் செய்யபப்ட்டுள்ளன.


மேலும் படிக்க | ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்; மா.செ கூட்டத்துக்கு ஏற்பாடு - எடப்பாடிக்கு தலைவலி


இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான enquiry.indianrail.gov.in இன் சமீபத்திய புதுப்பிப்பின்படி, 18 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.தற்போது குளிர்காலமாக இருப்பதால், பல்வேறு காரணங்களால், ரயில் இயக்கம் தாமதமாகிறது.


 இதுபோன்ற சூழ்நிலையில், ரயில் பயணத்திற்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைப் பார்க்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள்


இந்த ஆண்டும் குளிர்காலத்தில் உறைப்பனி பெய்து வருவதால், வட இந்தியா முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவது  குளிர்காலங்களில் இயல்பான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில நாட்களாகவே, காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்து மட்டுமல்ல, சாலை மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.  


மேலும் படிக்க | இந்தியாவில் மிகவும் அதிக சொத்து வைத்துள்ள முதலமைச்சர் யார்? கேஜ்ரிவால்? முக ஸ்டாலின்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ