இனி ரயிலில் TTE-ஐத் தேடவேண்டிய அவசியம் இல்லை; புதிய வசதி..!!
ராஜ்தானி சூப்பர்ஃபாஸ்ட் உட்பட அனைத்து ரயில்களிலும் டி.டி.இ சந்திக்க அலைய வேண்டிய அவசியம் இல்லை. புதிய ஏற்பாட்டை செய்த இந்திய ரயில்வே நிர்வாகம். இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...!!
புதுடெல்லி: நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. ரயிலில் பயணிக்கும்போது, பல பயணிகள் ரயில் டிக்கெட் பரிசோதனையாளரை (TTE) நாடுவது என்பது பெரும்பாலும் காணப்படுகிறது. அப்படி டிக்கெட் பரிசோதனையாளர் காண பயணிகள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சில சமயம் சரியான நேரத்திற்கு டிடிஇ கிடைப்பத்தில்லை. அத்தகைய சூழ்நிலையில் இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஒரு நல்ல முடிவயை எடுத்துள்ளது. பயணிகள் டி.டி.இ-யைத் தேட வேண்டிய அவசியமில்லாத ஒரு ஏற்பாட்டை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என்பது தான் அந்த நல்ல செய்தி. ரயில்வே சுற்றறிக்கையின் படி, அனைத்து வகை ரயில்களிலும் டி.டி.இ மற்றும் பாதுகாப்புக் காவலர்களுக்கு நிரந்த இருக்கைகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை மூலம், காத்திருப்பு (Waiting) மற்றும் ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் டி.டி.இ-யைத் தொடர்புக்கொள்ள வசதியாக இருக்கும். அங்கும், இங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கமாக ஆர்.ஏ.சி மற்றும் காத்திருப்பு பயண டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் இருக்கைக்காக டி.டி.இ-யைத் தேடுவார்கள், அத்தகைய பயணிகளுக்கு டி.டி.இ கிடைக்காதபோது, சில நேரங்களில் அவர்கள் ரயில் பெட்டியின் தரையில் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பயணம் செய்கிறார்கள். அவ்வாறு செய்வது விதிமுறைககளுக்கு எதிரானது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே தரையில் பயணிப்பதை விட TTE ஐ சந்திப்பது நல்லது. டி.டி.இ எந்த ரயிலில் எந்த பெர்த்தில் இருப்பார் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
ராஜதானி மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள்:
சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஒவ்வொரு படுக்கை வசதிகள் பெட்டிகளின் 7 ஆம் இருக்கை டி.டி.இ-க்கு நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில், நீங்கள் ஒரு இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் TTE ஐத் தேடி அலைய வேண்டியதில்லை. அதாவது டி 1, டி 3, டி 5 மற்றும் டி 7 ஆகிய பெட்டிகளில் டி.டி.இ-க்கு தனியாக இருக்கைகள் இருக்கும்.
கரிப்ரத் ரயில்:
நீங்கள் கரிப்ராத்தில் (சேர்கார்) பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்த வகை ரயிலில் ஜி 1, ஜி, 3, ஜி 5, ஜி 5 பெட்டிகளில் 7 ஆம் எண் இருக்கை டிடிஇ-க்கு கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் கரிப்ரத்தின் பொருளாதார வகுப்பில் பயணம் செய்தால், பி 1 மற்றும் பிஇ 1 பெட்டியில் உள்ள 7 ஆம் எண் இருக்கையில் டிடிஇ இருப்பார்.
சூப்பர்ஃபாஸ்ட்:
சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் பயணிக்கும் பயணிகள் டி.டி.இ.வை சந்திக்க ஏ-1 கோச்சில் உள்ள பெர்த் எண் 5-க்கு செல்ல வேண்டும். ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி ஊழியர்களுக்கும், ரயில்வே பெட்டியின் எஸ்-1 இன் 63 எண் ஆம் பெர்த் வழங்கப்பட்டு உள்ளது.