இந்திய ரயில்வே பயணிகளின் வசதியை மனதில் கொண்டு ரயில்வே முன்பதிவு விளக்கப்படத்தை ஆன்லைனில் பார்க்கும் வசதியினை அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே பயணிகளின் வசதியை மனதில் கொண்டு இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர இந்தியன் ரயில்வே, ரயில்வே முன்பதிவு விளக்கப்படத்தை ஆன்லைனில் உருவாக்கியுள்ளதுடன், எந்தவொரு ரயிலிலும் முன்பதிவு நிலையை ஒரு சில கிளிக்குகளில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.


ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் எந்த ரயிலின் முதல் முன்பதிவு விளக்கப்படத்தையும் பயணிகள் காணலாம். மற்றும் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது விளக்கப்படத்தைக் காணலாம். இந்த விளக்கப்படத்தின் மூலம், ரயிலில் முழு பயணம், பெர்த்த்கள் மற்றும் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களை எந்த நிலையத்திலிருந்து நடுத்தர நிலையம் வரை பெறலாம்.



இந்த வசதி குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இத்துடன் ரயிலின் பயணம் மிகவும் சீராக செய்யப்பட்டுள்ளது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இப்போது ஒரு ரயிலின் விளக்கப்படம் தயாரிக்கப்பட்ட பிறகு, ரயில் பயணிகள் ஒரே கிளிக்கில் வெற்று, முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் ஓரளவு முன்பதிவு செய்யப்பட்ட பெர்த்த்களின் நிலையைக் காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் கீழ், சில நிமிடங்களில் ரயில்களில் முன்பதிவு நிலையை பயணர்கள் காண முடியும். 


ரயில்வே முன்பதிவு விளக்கப்படத்தைக் காணும் படிகள் பின்வருமாறு:


  • முதலில் IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைக

  • இடது பக்கத்தில், 'Book Your Ticket' பிரிவின் கீழ், Charts / Vacancy என்னும் வசிதிகளை நீங்கள் காணலாம்.

  • Charts / Vacancy-னை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கப்படும்.

  • இந்த பக்கத்தில், நீங்கள் ரயிலின் பெயர் அல்லது எண்ணை உள்ளிட வேண்டும்.

  • இதற்குப் பிறகு, பயணத் தேதியை உள்ளிட வேண்டும்.

  • பின்னர் போர்டிங் ஸ்டேஷனை உள்ளிட்டு 'Get Train Chart' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.