’திருமணத்துக்கு லேட் ஆச்சு...ப்ளீஸ்’ மாப்பிள்ளை வைத்த கோரிக்கை - உதவிய ரயில்வே துறை
Indian Railways | மும்பையைச் சேர்ந்த மணமகன் ஒருவருக்கு சரியான நேரத்தில் கவுகாத்தியில் நடந்த திருமணத்துக்கு செல்ல இந்திய ரயில்வே உதவியிருக்கிறது.
Indian Railways Latest News | மும்பையில் இருந்து கவுகாத்திக்கு திருமணத்துக்காக ரயிலில் சென்ற மணமகன் வைத்த கோரிக்கையை இந்திய ரயில்வே நிறைவேற்றி கொடுத்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த சந்திரசேகர் வாக் தன்னுடைய திருமணத்துக்காக கவுகாத்தி புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்யாண் ரயில்வே நிலையத்தில் இருந்து ஹவுரா சென்று, அங்கிருந்து கவுகாத்தி செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். கல்யாண் - ஹவுரா இடையே கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ரயில் தாமதமாக சென்றுள்ளது. அதாவது, ஹவுரா ரயில் நிலையத்தை சுமார் 3 மணி நேர தாமத்துக்குப் பிறகே சென்றடையும் நிலை உருவானது.
இதனைப் எதிர்பார்க்காத மணமகன், மாலை 4 மணிக்கு கவுகாத்தி செல்லும் சாரிகாட் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தார். ஒருவேளை அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை என்றால் குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் இவர் திருமணத்தில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிவிடும். என்ன செய்வது என தெரியாமல் ரயிலுக்குள் மாட்டிக் கொண்ட மாப்பிள்ளை உடனே ரயில்வேத்துறைக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் தன்னுடைய ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவிட்டு தன்னுடைய நிலைமையையும் எடுத்துரைத்தார்.,
சந்திரசேகர் வாக் பதிவிட்ட எக்ஸ் பதிவில், " அவசர உதவி தேவை, நாங்கள் 35 பேர் கொண்ட குழு, எனது திருமணத்திற்காக கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறோம், இது 3.5 மணிநேரம் தாமதமாக செல்கிறது. சாரிகாட் எக்ஸ்பிரஸை மாலை 4:00 மணிக்கு பிடிக்க வேண்டும், இது கடினமாகத் தெரிகிறது. தயவு செய்து உதவுங்கள்." என கோரிக்கை வைத்தார். பொதுவாக இப்படியான கோரிக்கைக்கு எல்லாம் ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்காது. ஆனால் சந்திரசேகருக்கு அன்றைக்கு அதிர்ஷ்டம் போல. உடனே அவருடைய கோரிக்கை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
ஹவுரா ரயில் நிலையத்தை தொடர்பு கொண்ட உயரதிகாரிகள் இந்த சம்பவத்தை தெரிவித்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு ரயில்வே உயரதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து கீதாஞ்சலி ரயில் ஓட்டுநருக்கு விரைவாக ரயிலை இயக்கி ஹவுரா வருமாறு உத்தரவிடப்பட்டது. மறுபுறம் சாரிகாட் ரயில் தாமதமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சந்திரசேகர வாக் குடும்பத்தினர் ஹவுரா ரயில் நிலையம் வந்து சாரிகாட் ரயிலில் ஏறி திருமணத்துக்கு புறப்பட்டனர். அவரும் ரயில்வே துறையின் இந்த துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது, " சந்திரசேகர் வாக் நிலை குறித்து ஹவுரா ரயில் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு உதவுமாறு ரயில்வே உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநரை தொடர்பு கொண்டு ரயிலை வேகமாக இயக்கி ஹவுரா வருமாறு அறிவுறுத்தினோம். மறுபுறம் அசாம் செல்லும் சாரிகாட் எக்ஸ்பிரஸ் ரயிலை தாமதமாக கிளம்ப அறிவுறுத்தினோம். கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா வந்ததும், உடனடியாக சந்திரசேகர வாக் குடும்பத்தினரை எலக்டிரிக் வண்டி மூலம் ஏற்றி சாரிகாட் ரயில் நடைமேடைக்கு கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படியே அவர்களும் ரயிலில் ஏறிய பிறகு சாரிகாட் எக்ஸ்பிரஸ் அசாமுக்கு புறப்பட்டது" என தெரிவித்தனர். ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை பாராட்டை பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க | IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!
மேலும் படிக்க | IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ