இந்திய ரயில்வே நமது பெருமைக்குரியது. இந்த இரயில்வே 66,687 கிமீ ஓடும் பாதையைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது உலகின் நான்காவது பெரிய ரயில் போக்குவரத்து நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இது நாட்டிலேயே மலிவான பயண முறையாகக் கருதப்படுகிறது. நீங்களும் நிச்சயம் எப்போதாவது ரயிலில் பயணம் செய்திருப்பீர்கள். நீங்கள் பயணம் செய்யாவிட்டாலும், ரயிலை நிச்சயம் பார்த்திருக்க கூடும். அதில் உள்ள மக்கள் கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ரயில் நிலையத்தில் மிக அதிக எண்ணிக்கையில், நான்கு திசைகளுக்கும் ரயில்கள் இயங்கும் அத்தகைய ரயில் நிலையத்தைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்வோம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி, மும்பை ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நாட்டிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் எது என பலருக்கும் சரியாக தெரிவதில்லை. மிக பரபரப்பான ரயில் நிலையத்தில் இருந்து தினமும் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். அந்தா வகையில், ஒரு நாளைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஹவுரா ரயில் நிலையம், நாட்டிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு அதிகபட்சமாக 23 பிளாட்பார்ம்கள் உள்ளன. இதன் மூலம் தினமும் 10 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர்.


ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம்


கடந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் இது இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். ஒரு நாளைக்கு 974 வருகை / புறப்பாடு என்ற அளவில் உள்ள 210 தனித்துவமான ரயில்கள் மற்றும் 23 நடைமேடைகளுடன், முழு இந்திய இரயில்வே அமைப்பிலேயே அதிக எண்ணிக்கையிலான பிளாட்பார்ம்கள் கொண்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் எந்த இரயில் நிலையத்தையும் விட அதிக இரயில் கையாளும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் நாள் ஒன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கையில் மிகவும் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!


புது தில்லி நிலையம்


புது தில்லி ரயில் நிலையம் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையம் ஆகும். இது 16 நடைமேடைகளுடன் தினமும் 400 ரயில்கள் மற்றும் 500,000 பயணிகளைக் கையாளுகிறது மற்றும் உலகின் மிகப்பெரிய பாதை இன்டர்லாக் அமைப்புக்கான சாதனையையும் கொண்டுள்ளது.


லக்னோவின் சார்பாக் ரயில் நிலையம்


1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லக்னோவின் சார்பாக் ரயில் நிலையம், இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும், இந்த நிலையத்தின் வழியாக தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. லக்னோ சார்பாக் ரயில் நிலையம் அதன் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது மற்றும் இந்தியாவின் மிக அழகான ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. 15 நடைமேடைகள் உள்ள இந்த ஸ்டேஷனில் இருந்து தினமும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.


இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்சியமான தகவல்கள்


உலக நாடுகளுக்குப் பிறகு, இந்தியா தற்போது ரயில்வே துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பாக, உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலைய சந்திப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயில் நிலையம் வழியாக குறைந்தது 3 வழித்தடங்கள் செல்லும் நிலையங்கள் ரயில் சந்திப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை உள்ளது. முன்னதாக இந்த சாதனை கரக்பூர் ஸ்டேஷன் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டம்... உலக தரத்தில் ரயில் நிலையங்கள்... பயன்பெறும் தமிழக ரயில் நிலையங்கள் பட்டியல்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ