மணமகன் கொடுத்த 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'... அதற்கு மணமகள் கொடுத்த 'கியூட் ரியாக்சன்' - வைரல் வீடியோ

Cute Viral Video: திருமண நிச்சயதார்த்தத்தின்போது மணமகன் சர்ப்ரைஸ் அளித்த நிலையில், அதற்கு மணமகள் கியூட் ரியாக்சன் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 4, 2024, 11:50 AM IST
  • இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
  • 1 லட்சத்திற்கும் மேல் வியூஸ் போயுள்ளது.
  • நெட்டிசன்கள் இந்த வீடியோவில் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மணமகன் கொடுத்த 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'... அதற்கு மணமகள் கொடுத்த 'கியூட் ரியாக்சன்' - வைரல் வீடியோ

Cute Engagement Couple Viral Video: திருமணம் என்பது இந்த காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடக்கிறது. அது காதலித்து திருமணம் செய்யும் தம்பதியாக இருந்தாலும் சரி, குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட தம்பதியாக இருந்தாலும் சரி திருமணத்தை கோலாகலமாக கொண்டாடவே திட்டமிடுகின்றனர். பல லட்ச ரூபாய்களை செலவழித்து ஒட்டுமொத்த ஏற்பாடுகளையும் செய்யும் அவர்கள், திருமணத்தை முழுவதுமாக பதிவு செய்யவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களை நன்கு செலவு செய்து ஏற்பாடு செய்கின்றனர். 

Add Zee News as a Preferred Source

அதாவது, அன்றைய ஒருநாளுக்காகதான் பெண் வீட்டாரும் சரி, ஆண் வீட்டாரும் சரி பல லட்சங்களை சேமித்து வைத்திருப்பார்கள். அந்த அனைத்தையும் அவர்கள் அன்றுதான் செலவழிப்பார்கள். எனவே அந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் கொண்டாடுவார்கள். அதிலும் திருமணம் செய்துகொள்ளும் மணமகன், மணமகள் ஆகியோர் பரஸ்பரம் இருவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கவும் நினைப்பார்கள்.

மணமகள் கொடுத்த கியூட் ரியாக்சன்

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமகன், தனது வருங்கால மனைவிக்கு அளித்த சுவீட் சர்ப்ரஸை அளிக்கிறார், அதை பார்க்கும்போது மணமகள் கொடுக்கும் கியூட் ரியாக்சன்தான் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது எனலாம். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இந்த வீடியோ திருமணத்தின் போது எடுக்கப்பட்டதில்லை, நிச்சயதார்த்தத்தில் எடுத்தது. ஆம், அந்த மணமகன் நிச்சயதார்த்தம் அன்று மணமகளை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றதை அந்த வீடியோவை பார்க்கும்போதே தெரிந்துகொள்ளலாம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும் படிக்க | தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை குடித்த மக்கள்!! அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ..

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன் தனது மோதிர விரலில் சின்ன டாட்டூவை போட்டுள்ளார். அந்த டாட்டூதான் வருங்கால மனைவிக்கு அவர் கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ் ஆகும். நிச்சயதார்த்தத்தின் போது மணமகள், அந்த மணமகனின் விரலில் மோதிரம் போடும்போதுதான் அந்த விரல் டாட்டூவை பார்த்து மகிழ்ச்சியில் உறைந்துவிடுகிறார். மிகவும் இயல்பாக மோதிரம் போட கையை நீட்டிய மணமகன், அந்த பெண் சர்பரைஸால் மகிழ்ச்சியில் அடைந்ததை கண்டு மனம் மகிழ்வதும் அந்த வீடியோவிலேயே தெரிகிறது. 

நெட்டிசன்களின் அனுபவம்

தனது வருங்கால மனைவியை சந்தோஷப்படுத்த அந்த மணமகன் செய்த காரியத்தை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். பல காதலர்கள் தங்களின் இணையர்களுக்கு இந்த வீடியோவை டேக் செய்கின்றனர். ஏற்கெனவே திருமணமான தம்பதிகளும் இந்த வீடியோ தங்களின் இணையர்களுக்கு அனுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதிலும் பலரும் தங்களின் திருமணத்தின்போது நடத்த சுவாரஸ்யமான சர்பரைஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். திருமணம் என்பது இரு மனங்கள் சேரும் நிகழ்வு என்றாலும், ஒரு நீண்ட பயணத்தின் நல்ல தொடக்கம்தான் திருமணம் எனலாம். எனவே அந்த தொடக்கத்தை சிறப்பாக மாற்றும் விஷயமாக இதுபோன்ற சர்பரைஸ்கள் அமைகின்றன. இதுபோன்ற சர்பரைஸ்கள் இயல்பானதாக இருக்க வேண்டும், சர்ஃபரைஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் செய்வது நல்லதல்ல.

மேலும் படிக்க | காரின் கூரையில் கொண்டாடப்பட்ட தீபாவளி!! இங்க வெச்சா ராக்கெட் விட்றது? வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News