மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ரயில்வே அறிவிப்பால் செம என்ஜாய்மெண்ட்
IRCTC Tour Package: IRCTC தென்னிந்திய பயணத் தொகுப்பின் கீழ் தென்னிந்தியாவின் பல கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகிறது. டூர் பேக்கேஜின் விலை மற்றும் தேதியை அறிந்து கொள்ளுங்கள்.
ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: நீங்களும் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களுக்குச் செல்ல விரும்பினால், இந்திய ரயில்வே (Indian Railways) உங்களுக்காக ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. உண்மையில், தென்னிந்தியாவைச் சுற்றிப்பார்க்க 'தேகோ அப்னா தேஷ்' திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் இயக்கப்படும் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் (Bharat Gaurav Tourist Train) தொடங்கப்பட உள்ளது. இந்த ஆன்மிக ரயில் பயணம் டிசம்பர் 11 ஆம் தேதி மால்டா டவுனில் இருந்து தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி மால்டா டவுனுக்கு திரும்பும்.
இந்த பேக்கேஜ் மொத்தம் 11 இரவுகள் மற்றும் 12 பகல்களுக்கு இருக்கும். இந்த டூர் பேக்கேஜ் மூலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் (ஜோதிர்லிங்கம்), திருப்பதி ஏழுமலையான் கோயில், மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவென்றால், நீங்கள் பணம் மட்டும் செலுத்தினால் போதும், அதன் பிறகு பயணத்தின் போது உணவு, பானம் மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட் செய்தி.. அகவிலைப்படி 50% அதிகரிக்கும்
இந்த கோவில்களுக்கு தரிசனம் வழங்கப்படும்
ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையான் கோவில்
கூடல் நகர்: மீனாட்சி அம்மன் கோவில்
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவில்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கோவில், விவேகானந்தர் பாறை
திருவனந்தபுரம்: ஸ்ரீ பத்மநாசுவாமி கோவில்
மார்க்கப்பூர்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் (ஜோதிர்லிங்கம்)
டூர் பேக்கேஜின் கட்டண விவரம் எவ்வளவு?
டூர் பேக்கேஜூக்கான கட்டணமானது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையின்படி இருக்கும். இந்த பேக்கேஜுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.22,750 முதல் தொடங்குகிறது. நீங்கள் எகானமி வகையின் கீழ் முன்பதிவு செய்தால், ஒரு நபருக்கு ரூ.22,750 செலவழிக்க வேண்டும். ஸ்டாண்டர்ட் வகையின் கீழ் முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.36,100 செலவழிக்க வேண்டும். அதேசமயம், கம்ஃபர்ட் பிரிவின் கீழ் முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.39,500 செலவழிக்க வேண்டும்.
டூர் பேக்கேஜின் விவரங்கள் இவை:
பெயர்: பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலின் தென்னிந்திய சுற்றுலா DAKSHIN BHARAT YATRA BY BHARAT GAURAV TOURIST TRAIN (EZBG08)
எத்தனை நாட்கள்: 11 இரவுகள், 12 நாட்கள்
டூர்/ரயில் பயணம்: திருப்பதி - மீனாட்சி அம்மன் கோவில் - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - மல்லிகார்ஜுன் ஜோதிர்லிங்கம்
பயண தேதிகள்: 11.12.2023 முதல் 22.12.2023 வரை
மேலும் படிக்க | இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ