புனித யாத்திரை செல்ல பிளானிங் ஆ? ரயில்வேயின் அசத்தலான புதிய டூர் பேக்கேஜ் இதோ
இன்று வரை வைஷ்ணோ தேவி கோவில் தரிசனம் செய்ய நீங்கள் சென்றதில்லை மற்றும் இந்த நவராத்திரியில் அம்மனை தரிசிக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்திய ரயில்வே உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசை கொண்டு வந்துள்ளது.
ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜின் முழு விவரம்: பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயால் பல வகையான டூர் பேக்கேஜ்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் உதவியுடன், நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் எளிதாக பயணம் செய்யலாம், ஏனென்றால் முழுப் பொறுப்பும் இந்திய ரயில்வே எடுத்துக்கொள்ளும். அதன்படி நீங்கள் டென்ஷன் இல்லாமல் மத யாத்திரை செல்ல விரும்பினால் அல்லது உங்கள் வயதான பெற்றோரை கோயிலுக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்திய ரயில்வே ஒரு சிறப்பான பேக்கேஜெய் கொண்டு வந்துள்ளது. எனவே ரயில்வே கொண்டு வந்துள்ள இந்த சிறப்புப் பேக்கேஜில், ஹரித்வார், மதுரா மற்றும் அமிர்தசரஸில் இருந்து வைஷ்ணோ தேவியை தரிசிக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெற்றோருக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள், பின்னர் பயணத்தின் போது தங்குமிடம், உணவு மற்றும் பயணம் அனைத்தையும் ரயில்வே ஏற்பாடு செய்யும்.
எந்தெந்த இடங்களை நீங்கள் பார்வையிடலாம்?
* ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் ஹர் கி பவுரி மற்றும் கங்கா ஆரத்தியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
* அமிர்தசரஸில் நீங்கள் கோல்டன் டெம்பிள் மற்றும் அட்டாரி வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
* கட்ராவில் மாதா வைஷ்ணோ தேவி தரிசனம் நடைபெறும்.
* கிருஷ்ணர் பிறந்த இடம் மற்றும் மதுராவில் உள்ள பிருந்தாவனத்திற்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
டூர் பேக்கேஜின் முக்கிய விவரம்:
சுற்றுப்பயணத்தின் பெயர்: பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயில் மூலம் “உத்தர பாரத் தேவபூமி யாத்ரா” (Uttar Bharat Devbhoomi Yatra)
காலம்: 08 இரவுகள் / 09 பகல்கள்
சுற்றுப்பயணம் தேதி: 28.10.2023
சுற்றுலா பயணம்: புனே - ஹரித்வார் - ரிஷிகேஷ் - அமிர்தசரஸ் - வைஷ்ணோதேவி - மதுரா.
டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
* நீங்கள் எகானமி வகுப்பில் அதாவது ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க விரும்பினால், ஒரு நபருக்கு ரூ.15300 செலவழிக்க வேண்டும்.
* இது தவிர, கம்ஃபர்ட் வகுப்பில் அதாவது தர்டு ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகள் ஒரு நபருக்கு ரூ.27200 செலவழிக்க வேண்டும்.
* அதேபோல், டீலக்ஸ் வகுப்பில் அதாவது செகண்ட் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகள் ஒருவருக்கு ரூ.32900 செலுத்த வேண்டும்.
* ஏசி இல்லாத ஹோட்டல்களில் இரட்டை மற்றும் மும்மடங்கு பகிர்வுகளில் தங்குவதற்கான விருப்பம் இங்கே வழங்கப்படுகிறது.
எப்போது மட்டும் எத்தனை நாட்கள் டூர் பேக்கேஜ் அடங்கும்?
* இந்த பயணத் திட்டத்தின் மூலம் நீங்கள் 8 இரவுகள் மற்றும் 9 பகல்களுக்கு பயணிக்க முடியும்.
* இந்த பயணம் 2023 அக்டோபர் 28 முதல் தொடங்கும்.
* புனே, லோனாவாலா, கர்ஜத், கல்யாண், வசாய் ரோட், வாபி, சூரத் மற்றும் பரோடா ஆகிய இடங்களிலிருந்து பயணத்திற்கான டிக்கெட்டுகளை நீங்கள் பதிவு செய்யலாம்.
நீங்களும் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய விரும்பினால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctctourism.com/indian-domestic-holidays/delhi-tour-packages ஐப் பார்வையிடுவதன் மூலம் புக் செய்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | டபுள் ஜாக்பாட்.. உயர்கிறது அகவிலைப்படி, ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ