ஐஆர்சிடிசி தற்போது தென்னிந்திய டிராவல் டூர் பேக்கேஜ் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் "Dekho Apna Desh" இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் "பாரத் கௌரவ் ரயிலில்" (BHARAT GAURAV TOURISTS) இருக்கும். IRCTC நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயணிகளுக்காக பல்வேறு சுற்றுலா பேக்கேஜ்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் பயணிகள் வசதியாகவும் மலிவாகவும் பயணம் செய்கிறார்கள். IRCTC டூர் பேக்கேஜ்களின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் பயணிகளுக்கான தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐஆர்சிடிசியின் தென்னிந்திய பயண சுற்றுலாத் தொகுப்பு பற்றிய முழு தகவலைத் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EMI இல் தொகையை செலுத்த முடியும்
ஐஆர்சிடிசியின் தென்னிந்திய டிராவல் டூர் பேக்கேஜில், சுற்றுலாப் பயணிகள் இஎம்ஐ மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜுக்கான கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1039 EMI மூலம் செலுத்தலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால் EMI மூலம் இந்தப் பயணத்தைச் செலுத்தி பயணத்தின் பலன்களை நீங்கள் பெறலாம்.


மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்..? அபிஷேக் பச்சன் கொடுக்கும் அற்புதமான டிப்ஸ்..!  



இந்த டூர் பேக்கேஜ் 11 நாட்களுக்கு இருக்கும்:
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜ் 11 நாட்கள் நீடிக்கும். கோரக்பூரில் இருந்து தொடங்கும் தென்னிந்திய டிராவல் டூர் பேக்கேஜ் 10 இரவுகள் மற்றும் 11 பகல்கள் ஆகும். இந்த டூர் பேக்கேஜுக்கான தொடக்கக் கட்டணம் ரூ.21,420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com மூலம் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.


இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்கும்?
ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் அக்டோபர் 28 முதல் தொடங்கும். கன்னியாகுமரி, மதுரை, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்கள் இந்த டூர் பேக்கேஜில் உள்ளடக்கப்படும்.


ஐஆர்சிடிசி (IRCTC) இன் இந்த டூர் பேக்கேஜின் கட்டணம்
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜுக்கான கட்டணம் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது. டூர் பேக்கேஜின் கம்ஃபர்ட் வகுப்பில் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.48420 கட்டணம் செலுத்த வேண்டும். அதேசமயம், நீங்கள் ஸ்டாண்டர்ட் பிரிவில் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.36400 கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் எகானமி வகுப்பில் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.21420 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கம்ஃபர்ட் வகுப்பு கட்டணமாக ரூ.46,700, ஸ்டாண்டர்ட் பிரிவில் ரூ.35,000 மற்றும் எகானமி பிரிவில் ரூ.20,200 கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ