ஐஆர்சிடிசி இந்தியன் ரயில்வே டூர் பேக்கேஜ் விவரம்: நீங்கள் தென்னிந்தியாவின் முக்கிய கோவில்களுக்கு செல்ல விரும்பினால், இந்திய ரயில்வே உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது. உண்மையில், இந்திய ரயில்வேயின் ஒரு நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), பாரத் கௌரவ் ரயிலில் தென்னிந்தியாவிற்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த பேக்கேஜ் மூலம் மல்லிகார்ஜுனர் கோயில், திருப்பதி பாலாஜி கோவில், மீனாட்சியம்மன் கோவில், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் (KANYAKUMARI, KUDALNAGAR, MALLIKARJUN, RAMESHWARAM, RENIGUNTA JN, TRIVANDRUM) ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஆர்சிடிசி ட்வீட் மூலம் இந்த ரயில் பயணத் தொகுப்பு குறித்த தகவலைத் தெரிவித்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் மால்டா டவுனில் இருந்து அடுத்த மாதம் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும். IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த டூர் பேக்கேஜின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் பணம் செலுத்தினால் போதும், அதன் பிறகு பயணத்தின் போது உணவு, பானம் மற்றும் தங்குமிடம் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை.


மேலும் படிக்க | உங்கள் கிரெடிட் ஸ்கோரை கிரெடிட் கார்டு இல்லாமல் அதிகப்படுத்துவது எப்படி?



கட்டணம் எவ்வளவு, என்னென்ன வசதிகள் வழங்கப்படும்?
தென்னிந்திய கவுரவ் யாத்ராவிற்கு {DAKSHIN BHARAT YATRA BY BHARAT GAURAV TOURIST TRAIN (EZBG08)}, இந்திய ரயில்வே ரயிலில் 3 வகைகளில் டிக்கெட்டுகளை வைத்துள்ளது. நீங்கள் எகானமி வகையின் கீழ் முன்பதிவு செய்தால், ஒரு நபருக்கு ரூ.22,750 செலவழிக்க வேண்டும். ஸ்டாண்டர்ட் வகையின் கீழ் முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.36,100 செலவழிக்க வேண்டும். அதேசமயம், கம்ஃபர்ட் பிரிவின் கீழ் முன்பதிவு செய்ய, ஒரு நபருக்கு ரூ.39,500 செலவழிக்க வேண்டும். இதில், ஏசி மற்றும் ஏசி இல்லாத ஹோட்டல்களில் வகைக்கு ஏற்ப இரவு தங்கும் வசதியும் இருக்கும். அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜில் பயணிகளுக்கு காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வசதி ஆகியவை செய்து தரப்படும்.


முக்கிய குறிப்பு: பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ் ரயில் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ரயில்வே தோராயமாக 33% சலுகையை வழங்குகிறது. மேலே உள்ள விலை சலுகையை உள்ளடக்கியது.


இந்த கோவில்களுக்கு தரிசனம் வழங்கப்படும்:
ரேணிகுண்டா, ஆந்திரா: திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
கூடல்நகர், மதுரை: மீனாட்சி அம்மன் கோவில்
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவில்
கன்னியாகுமரி, தமிழ்நாடு: கன்னியாகுமரி கோவில், விவேகானந்தர் பாறை
திருவனந்தபுரம், கேரளா: ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில்
மார்க்கப்பூர், ஸ்ரீசைலம்: மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்


மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ