இந்திய ரயில்வே... இறுதி ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் நேரத்தில் விரைவில் மாற்றம்
ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது.
இந்திய ரயில்வே நெட்வொர்க் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்தின் உயிர்நாடியாக செயல்படுகிறது இந்திய ரயில்வே. இந்திய ரயில்வே தினந்தோறும் 13,000க்கும் அதிகமான ரயில்களை இயக்கி வருகிறது.
தற்போது ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது. பின்னர், இறுதி சார்ட் 5 நிமிடங்கள் முன்னதாக தயாரிக்கப்படுகிறது. இதனால், பல பயணிகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
ரிசர்வேஷன் சார்ட் தயாரிப்பதற்கும் ரயில் புறப்படுவதற்கும் இடையில் ஒரு பயணி தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு பல வகையில் குழப்பங்கள் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட, ரயில்வே பயணிகளின் தகவல் அடங்கிய இறுதி ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கும் நேரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, இந்திய ரயில்வேயின் இறுதி சார்ட் ரயில் புறப்படும் நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்த நேரத்தை 15 நிமிடங்களாக அதிகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடைசி நிமிடத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் விவரங்கள் ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட இறுதி சார்டில் பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் பயணிகள் சந்தைப்படுத்தல் இயக்குநர் சஞ்சய் மனோச்சா, வடகிழக்கு ரயில்வே உள்ளிட்ட அனைத்து பிராந்திய ரயில்வேக்கும் டிசம்பர் 20ஆம் தேதி கடிதம் அனுப்பி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு ஜனவரி 2ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஜனவரி 2ம் தேதிக்குப் பிறகுதான் இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இறுதி ரிசர்வேஷன் சார்ட். இதன் காரணமாக, கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் விவரங்கள் HHT-யில் கிடைக்கும். ஆனால் பின்னர் இந்த நேரம் ஐந்து நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
மேலும் படிக்க | ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
TTE-க்கு வழங்கப்பட்ட தகவலில், கடைசி நேரத்தில் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் பற்றிய தகவல்கள் இருப்பதில்லை. ஐஆர்டிசி எஸ்ஓ புரவலர் டிஎன் பாண்டே கூறுகையில், அரை மணி நேரத்திற்கு முன்பு சார்ட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு முந்தைய விதி அமலுக்கு வந்த பிறகு, டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களைத் தவிர, பயணிகளும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இறுதி செய்யப்பட்ட சார்ட் பல நேரங்களில் சரியான நேரத்தில் பதிவிறக்கம் செய்யப்படுவதில்லை.
ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் முதல் சார்ட் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரவு 7.55 மணிக்கு புறப்படும் நிலையில், அதன் சார்ட் மாலை 3.55 மணிக்கு தயாராக உள்ளது. இதற்குப் பிறகு, தட்கல், பிரீமியம் தட்கல் அல்லது பிற கோட்டா இருக்கை காலியாக இருந்தால், பயணிகள் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அதை முன்பதிவு செய்யலாம். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு முன்பே சார்ட் தயார் செய்யப்படுவதால், கடைசி நேரத்தில் முன்பதிவு செய்த தகவல் TTE-க்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. தற்போது, இந்த அமைப்பில் உள்ள பிரச்னைகளை கருத்தில் கொண்டு, 15 நிமிடங்களுக்கு முன்னதாக, சார்ட் தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு வரும் இறுதி அட்டவணை பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக டி.என்.பாண்டே கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு, அதனை முன்னெடுத்துச் செல்லுமாறு ரயில்வே வாரியத்துக்கு எங்கள் அமைப்பு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நேரத்தை 5 நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்களாக உயர்த்தினால் பிரச்சனைகள் தீரும் என்ற கருத்து நிலவுகிறது.
மேலும் படிக்க | IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ