இந்திய ரயில்வே, தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க். இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் கன்பர்ம் டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் அதிகம். குறிப்பாக, பண்டிகை காலங்களில், டிக்கெட் புக் செய்யும் போது, கன்பர்ம் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க ரயில்வே அமைச்சகம் மற்றும் IRCTC தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு தீர்வை வழங்கும் நோக்கில் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளின் வசதிக்காக 'VIKALP யோஜனா' என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
2023-24 நிதியாண்டில், VIKALP திட்டத்தின் கீழ், வெயிடிங் லிஸ்ட் டிக்கெட் 57,200 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு, மாற்று ரயில்களில் இருக்கைகள் கிடைத்துள்ளது என மாநிலங்கள் அவையில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பௌசியா கான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விகல்ப் திட்டத்தின் வெற்றி குறித்து விவரித்தார்.
விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிடிங் லிஸ்ட் டிக்கெட் உள்ள பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகளை வழங்கவும், ரயிலில் உள்ள காலி இருக்கைகளை அதிகபட்சமாக பயன்படுத்துவதை உறுதி செய்யவும் மாற்று ரயில்களில் இருக்கைகள் வழங்கப்படுகின்றன என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த திட்டம் 2016 முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிடிங் லிஸ்ட் டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள், தங்கள் பயணத்திற்கான மாற்று ரயிலைத் தேர்வு செய்யலாம். இதற்காக, IRCTC தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்கள் சில கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும். இதன் மூலம் பயணிகள் கன்பர்ம் டிக்கெட்டை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ரயில்வேயின் 'விகல்ப்' திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள முயற்சியாகும். இந்த திட்டத்தின் மூலம், பயணிகள் தங்கள் பயணத்திற்கான கூடுதல் ஆப்ஷன்களைப் பெறுகிறார்கள் மற்றும் உறுதிசெய்யப்பட்ட கன்பர்ம் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | IRCTC ரயில் டிக்கெட் புக்கிங்கில் சலுகைகளை பெற... இந்த கிரெடிட் கார்டுகள் உதவும்
விகல்ப் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
1. முதலில், IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிட்டு உள்நுழையவும்.
2. புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத் தேதி மற்றும் ரயில் வகுப்பு போன்ற பயணத் தகவலை உள்ளிடவும்.
3. பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையைத் தொடங்கவும். நீங்கள் கட்டண நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4. கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், "விகல்ப்" என்ற தேர்வுப்பெட்டியைக் காண்பீர்கள். இந்த பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
5. "விகல்ப்" என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் இயங்கும் மாற்று ரயில்களின் பட்டியலைப் பார்ப்பீர்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான ரயில்களைத் தேர்ந்தெடுக்கவும்.
6. டிக்கெட் முன்பதிவு செயல்முறை முடிந்ததும், உங்கள் PNR நிலையை (பயணிகளின் பெயர் பதிவு) சரிபார்க்கவும். மாற்று ரயிலில் இருக்கை உறுதி செய்யப்பட்டவுடன், PNR நிலையில் புதுப்பிப்பைக் காண்பீர்கள்.
விகல்ப் யோஜனா தொடர்பான சில முக்கிய விஷயங்கள்
விகல்ப் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. வெயிடிங் லிஸ்ட் பயணிக்கு, மற்றொரு ரயிலில் இருக்கை உறுதி செய்யப்பட்டவுடன், பயணி தனது முந்தைய முன்பதிவுக்கு மாற்ற முடியாது. இருப்பினும், உறுதி செய்யப்பட்ட மாற்று ரயில் டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு ரத்து கட்டணங்கள் பொருந்தும் என்பதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும். கூடுதலாக, பயணிகள் மாற்று ரயிலை தேர்ந்தெடுக்கும் போது, அதன் புறப்படும் நேரத்தை உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில் தாங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ரயிலை விட 12 மணிநேரம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கலாம்.
பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன் கீழ், இந்திய ரயில்வே, பல்வேறு வகையான வழக்கமான ரயில்களைத் தவிர, பயணிகளின் கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
மேலும் படிக்க | கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளுடன் பயணம் செய்ய ரயில்வே புதிய விதி, பயணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ