Indian Railways Important Rules: ரயிலில் பயணத்தின் போது ஒருபோதும் மறக்கக்கூடாத விதிமுறைகள் இவை. இவற்றை மறந்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக நீண்ட தூர பயணத்திற்காக ரயில்களில் பயணிப்பவர்கள், இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட தொலைவு பயணிக்கும்போது, உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பயணிக்க வேண்டும். அப்போது, ரயில்வே தொடர்பான 4 விதிகளை ஒருபோதும் மீறக்கூடாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயிலில்பயணம் செய்பவர்கள், அது தொடர்பான விதிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்து இருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால், அவ்வப்போது அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், இந்த 5 ரயில்வே விதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


இந்த விதிமுறைகள் மீறலுக்கு வெறும் அபராதம் மட்டுமல்ல, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். 


ரயிலின் கூரையில் பயணம் செய்வது


இந்திய ரயில்வே விதிமுறைகளின் படி, ஒரு நபர் ரயிலின் கூரையில் பயணித்தால், அவர் ரயில்வே சட்டத்தின் 156 வது பிரிவின் கீழ் 3 மாத சிறைவாசம் அல்லது ரூ .500 அபராதம் விதிக்க வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | ஜாக்பாட்.. இனி இவர்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியோ தள்ளுபடி


ரயில்வே டிக்கெட் விற்பனை


இந்திய ரயில்வே விதிகளின்படி, எந்த நபரும் டிக்கெட்டுகளை விற்க முடியாது. ரயில்வே பயணச்சீட்டுகளை விற்கும் ஒருவர் பிடிபட்டால்,  ரயில்வே சட்டத்தின் பிரிவு -143 இன் கீழ், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


ரயில்வே வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்தல்


நாட்டின் எந்த ரயில்வே வளாகத்திலும் முன் அனுமதியின்றி எந்த பொருட்களையும் விற்க முடியாது, அல்லது ஸ்டால் போட முடியாது. இந்த குற்றத்தைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ .2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ரயில்வே சட்டத்தின் பிரிவு 144 இன் கீழ் 1 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


உயர் வகுப்பு பெட்டியில் பயணம்


உங்களிடம் டிக்கெட் இருந்தாலும், நீங்கள் வாங்கியிருக்கும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வகுப்ப்பிற்கு பதிலாக, உயர் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதைக் கண்டால், ரயில்வே சட்டத்தின் பிரிவு -138 இன் கீழ் நீங்கள் தண்டிக்கப்படலாம். இதற்காக, உங்கள் அதிகபட்ச தூரம் வரை அதிகபட்ச கட்டணம் மற்றும் ரூ .250 அபராதம் வசூலிக்க முடியும். இந்த அபராதம் வழங்கப்படாவிட்டால் நீங்கள் தடுத்து வைக்கப்படலாம்.


மேலும் படிக்க | பென்ஷன் முதல் இலவச மருத்துவம் வரை! ESIC திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ