ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தில் தள்ளுபடி!
Indian Railways: இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டணம் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் அமலுக்கு வருகிறது.
Indian Railways: இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து மிகவும் முக்கியமான ஒன்று. தினசரி பல லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயிலில் டிக்கெட் புக் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கு எப்போதும் சில சலுகைகள் இருக்கும். லோயர் பெர்த் முதல் டிக்கெட் விலையில் தள்ளுபடி வரை பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே மூத்த குடிமக்களுக்கான முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் இந்திய ரயில்வேயால் நிறுத்தப்பட்ட கட்டணச் சலுகைகள் தற்போது மீண்டும் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் பயனடைவார்கள். இந்த மூத்த குடிமக்கள் சலுகை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேயால் மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?
மூத்த குடிமக்களுக்கான சலுகை
சமீபத்தில் வெளியான தகவலின்படி, மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான மத்திய அரசு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஏசி கிளாஸ்களுக்கு பதில், சாதாரண ஸ்லீப்பர் கிளாஸ்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை மீண்டும் வழங்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து கிளாஸ்களுக்கும் இந்த சலுகையை அறிவித்தால் ரயில்வேக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் சாதாரண பெட்டிகளுக்கு மட்டும் இந்த டிக்கெட் சலுகையை அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
சலுகையை எப்படி பெறுவது?
இதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 60 வயதை கடந்த அனைவருக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வேயின் இந்த சலுகையை பெற மூத்த குடிமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முன்பதிவு படிவத்தில் தள்ளுபடி என்பதில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த கட்டண சலுகையை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கோவிட் தொற்று காலத்திற்கு முன்பு வரை மூத்த குடிமக்களுக்கு பொது, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்வதில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.
எவ்வளவு சலுகை வழங்கப்படும்?
கோவிட் தொற்றுக்கு முன்பு வரை, இந்திய ரயில்வே 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில்வேயின் அடிப்படைக் கட்டணத்தில் 40% வரை தள்ளுபடி வழங்கியது. மேலும் 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த தள்ளுபடிகள் 2024 மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சலுகை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ரயில்வே கூறியதாவது: மூத்த குடிமக்கள் கட்டணத்தில் ஏற்கனவே ரூ.59,837 கோடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ரயிலில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவ் தெரிவித்துள்ளார். மார்ச் 20, 2020 முதல் 2021 மார்ச் 31 வரை, 1.87 கோடி மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் 1, 2021 முதல் பிப்ரவரி 2022 வரை, 4.74 கோடி மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். முன்பு மீண்டும் தள்ளுபடி வழங்க முடியாது என்று அரசு கூறி இருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ