NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு

National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.

National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான மொழியில் சொன்னால், கடைசியாக பெற்ற சம்பளமான மாதம் 50,000 ரூபாயாக இருந்தால், உங்களுக்கு மாதம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். 

1 /9

மத்தியில் மோடி 3.0 அரசு அமைந்துள்ளது. பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அரசிடம் மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவுப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 /9

இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக வழங்கும் உத்தரவாதம் அளிக்க அரசு முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

3 /9

கடந்த ஆண்டு மார்ச் 2024 இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. பங்களிப்பு இல்லாத OPS அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (Old Pension Scheme) மீண்டும் செல்லாமல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவது இதன் நோக்கமாக இருந்தது. 

4 /9

நாட்டின் பல மாநிலங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த மறுத்து, பழைய ஓய்வூதிய முறையான OPS -ஐ நடைமுறைப்படுத்தத் தொடங்கியபோது இந்தக் குழு அமைக்கப்பட்டது.  

5 /9

டிவி சோமநாதன் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு நிலையான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் சிறப்புச் செயலர் ராதா சவுகான், அன்னி மேத்யூ மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தீபக் மொஹந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

6 /9

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான மொழியில் சொன்னால், கடைசியாக பெற்ற சம்பளமான மாதம் 50,000 ரூபாயாக இருந்தால், உங்களுக்கு மாதம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். 

7 /9

இருப்பினும், மொத்த சேவை கால அளவு மற்றும் ஓய்வூதிய (Pension) நிதியிலிருந்து ஊழியர்கள் எடுத்துள்ள தொகை ஆகியவை கணக்கிடப்படும். இந்த ஓய்வூதிய உத்தரவாதத்தை பூர்த்தி செய்ய, ஓய்வூதிய நிதியில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து ஈடு செய்யப்படும்.

8 /9

தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 87 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அதன் பலனைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அகவிலைப்படி (Dearness Allowance) விகிதங்களின் அதிகரிப்புடன் இந்த தொகை தொடர்ந்து அதிகரிக்கும். ஓபிஎஸ் -இல் பங்களிப்பு இல்லாததால், அது நிதி ரீதியாக நிலையானதல்ல என்றும், அதனால் அரசாங்க கருவூலத்தின் மீதான சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சகம் கூறியுள்ளது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.