இந்தியன் ரயில்வேகளில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

174 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியன் இரயில்களில் மசாஜ் மையங்களை திறக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் தகவல்கள் வெளியானது.


நெடுந்தூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதுவாக மசாஜ் சென்டர்களை ஓடும் ரயில்களிலேயே அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. விமானங்களில் மூச்சு திணறல் ஏற்படுவதால் நோயாளிகள் பலர் ரயில்களிலேயே நீண்ட தூர பயணங்களை கடக்க வேண்டியுள்ளது. 


இந்நிலையில் தற்போது நீண்ட தூர பயணிகளுக்கு கலைப்பு தெரியாமல் இருக்க இரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய இரயில்வே முன்வந்துள்ளது. கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதி இரயில்களில் இரவு 10 மணி துவங்கி காலை 6 மணி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.  சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் கிடைக்கெப்பறும் இந்த மசாஜ் சேவைக்கு 100-லிருந்து 300 வரை வசூளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி  உள்ளது என்று ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என இந்தூர் தொகுதி பாரதிய ஜனதா எம்பி ஷங்கர் லால்வானி, ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார்.  அதில், ரெயில்களில் பெண்களும் பயணிக்கும் போது அவர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படும் என்பதால் மசாஜ் சென்டர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 


இதனைத்தொடர்ந்து  மக்களவை முன்னாள்  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதுபோன்ற சேவைகளை பயணிகளுக்கு முன்னால் வழங்குவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் ரெயில்களில் மசாஜ் சேவை தொடங்குவது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்தூரில் இருந்து செல்லும் ரெயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு  செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.