ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!
Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
Indian Railways Rules: இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்தைவிட ரயில்வே நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் ரீதியாக கம்மியாக இருப்பதால் பெரும்பாலோனோர் இதனை தேர்வு செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது அதன் விதிகளில் மாற்றம் கொண்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது ரயில்வேயின் விதிகளை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இல்லை என்றால் அதற்கான அபராதங்களை செலுத்த வேண்டும். ரயிலில் பயணம் செய்ய அடிப்படை விதி ரயில் டிக்கெட்டை எடுக்க வேண்டும். அதே போல ரயிலில் பயணம் செய்யும் போது சில பொருட்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிகள் எடுத்துச் செல்ல கூடாத பொருட்களை இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. இந்த பொருட்களை ரகசியாக எடுத்து சென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணத்தின் போது எடுத்து செல்ல கூடாத பொருட்கள் பின்வருமாறு:
அடுப்பு
கேஸ் சிலிண்டர்
எரியக்கூடிய எந்த ஒரு இரசாயனம்
பட்டாசுகள்
ஆசிட்
துர்நாற்றம் வீசும் விஷயங்கள்
எண்ணெய்
கிரீஸ்
பயணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்.
ஒரு பயணி எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்?
ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு பொருட்களை வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லலாம் என்று பயணிகள் நினைக்கின்றனர். ஆனால் விமான நிலையம் போலவே ரயிலிலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஒரு பயணி எத்தனை கிலோ லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என்று இந்திய ரயில்வே விதிகள் கூறுகிறது. ஒரு பயணி 40 முதல் 70 கிலோ எடையுள்ள பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல அனுமதி உள்ளது. இதற்கு அதிகமாக பொருட்களை நீங்கள் கொண்டு சென்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்திய ரயில்வே கோச்சுக்கு ஏற்றவாறு லக்கேஜ் எடையை நிர்ணயித்துள்ளது. ஸ்லீப் கோச்சுக்கு 40 கிலோ, ஏசி 2 டயர்க்கு 50 கிலோ மற்றும் ஏசி முதல் வகுப்புக்கு 70 கிலோ வரை கொண்டு செல்லலாம். இதை விட அதிக எடை கொண்ட லக்கேஜுடன் பயணம் செய்யும் போது, ரயில்வே அதிக கட்டணம் வசூலிக்கலாம். 40KGக்கு மேல் எடையுடன் 500KM வரை பயணம் செய்தால், அபராதமாக ரூ.109 செலுத்த வேண்டியிருக்கும். அதே போல ரயிலில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும். மொபைலில் சத்தமாகப் பாடல்களை கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது, சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை செய்ய கூடாது. உங்களால் மற்ற பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ