எந்த நேரத்தில் எங்கு செல்ல வேண்டுமானாலும், ரயில் பயணத்தையே மக்கள் பிரதானமாக தேர்வு செய்கின்றனர். குறுகிய தொலைவாக இருந்தாலும் அல்லது நீண்ட தொலைவாக இருந்தாலும் ரயில் பயணம் பாதுகாப்பு மற்றும் செலவு குறைவு. அதேநேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில விதிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வதிமுறைகளை தெரிந்து கொள்ளாமல் பயணிக்கும்போது தேவையில்லாத அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்படிக்க | ரயில்வேயில் வேலை, +2 படித்திருந்தால் போதும்: இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்


ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்தியன் ரயில்வே அறிவிக்கிறது. கொரோனா விதிமுறைகள் ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில், இப்போது பயணிகள் தூங்குவதற்கான விதிகளில் மாற்றம் செய்து, புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | டோர் டெலிவரி சேவையை தொடங்கும் ரயில்வே!


புதிய விதிமுறைகளின்படி, உங்கள் இருக்கையில் இருந்தவாறு மற்ற பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக பேசக்கூடாது. மேலும், மொபைல்களில் சத்தமாக பாடல்களை வைத்து கேட்கக்கூடாது. சக பயணிகள் உங்களின் நடவடிக்கைகள் தொந்தரவாக இருக்கும்பட்சத்தில் புகார் தெரிவிக்க முடியும். சக பயணிகளின் உறக்கத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் ரயில்வே வெளியிட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின்படி, குழுவாக அமர்ந்து பேசுவது, கேலி பேசி சத்தமாக சிரிப்பது ஆகியவை குறித்தும் புகார் தெரிவிக்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR