டோர் டெலிவரி சேவையை தொடங்கும் ரயில்வே!

இந்திய ரயில்வே நிர்வாகம் இனி மக்களுக்கு பொருட்களை டோர் டெலிவரி சேவையை தொடங்க இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 03:11 PM IST
  • Railway டோர் டெலிவரி செய்யும் சேவையை தொடங்க முடிவு செய்திருக்கிறது.
  • வீடுகளுக்கே பொருட்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  • தற்போது ரயில்வே நிர்வாகம் இதற்கான ஒரு ட்ரையலை தொடங்கவுள்ளது.
டோர் டெலிவரி சேவையை தொடங்கும் ரயில்வே! title=

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மக்களுக்கு பொருட்களை எப்படி டோர் டெலிவரி செய்கிறதோ அதேபோல இந்திய ரயில்வே நிர்வாகம் இனி மக்களுக்கு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை தொடங்க முடிவு செய்திருக்கிறது.  ரயில்வே நெட்வொர்க்கின் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு, அந்த பகுதிகளில் உள்ள தபால் துறை அல்லது தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.  

railway

மேலும் படிக்க | இனிமே ஈஸியா ஃப்ளிப்கார்ட்டில் நீங்க பயன்படுத்திய மொபைலை விற்கலாம்!

தற்போது ரயில்வே நிர்வாகம் இதற்கான ஒரு ட்ரையலை தொடங்கவுள்ளது.   ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் டெல்லி, என்சிஆர் மற்றும் குஜராத் சனந்த் செக்டர் பகுதிகளில் இந்த சோதனை தொடங்கப்பட இருக்கிறது.டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் உதவியுடன் டோர் டெலிவரி செய்யப்படும்.  இந்த சேவையின் மூலம் தனிநபர்கள் மட்டுமல்லாது மொத்தமாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் பயனடையலாம்.  

railway

ஊரடங்கு சமயத்தில் சாலை போக்குவரத்து தடைப்பட்டிருந்ததால் நோயாளிகளுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் வென்டிலேட்டர் போன்றவை ரயில்களில் தான் கொண்டுவரப்பட்டது.  இதுதான் தற்போது ரயில்வே நிர்வாகம் டோர் டெலிவரி செய்ய அடித்தளமாக அமைந்திருக்கிறது.  இந்த சேவையில் பங்கு பெற மக்கள் மொபைலில் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வோம் அல்லது இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து பொருட்களை அனுப்பவும் மற்றும் பெறவும் செய்யலாம்.

QR கோடு மூலம் பொருட்களின் இயக்கத்தை கண்காணிக்கலாம் மேலும் பொருட்களின் சராசரியான விலை மற்றும் அவை டெலிவரி செய்யப்படும் நேரத்தையும் மக்கள் அறிந்து கொள்ளலாம்.  ஒரு நபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ இந்த சேவை செயல்படும்.

மேலும் படிக்க | தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News