Indian Railways: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி. ரயில் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மேம்படுத்த அவ்வப்போது, ரயில்வே தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்படும். இந்நிலையில், ரயில்வே துறை மற்றொரு மகத்தான நடவடிக்கையை எடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே  நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கு, பெரிய அளவில் ரயில்வே (Indian Railway) முயற்சிகளை எடுத்து வருவதோடு, அதற்காக பெரிய அளவில் செலுவும் செய்து வருகிறது.  அப்படி இருந்தும் அசுத்தமாக  இருப்பதாக புகார் வருவது குறிப்பிடத்தக்கது. 


ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் காலி பேக்கெட்டுகள் போன்றவற்றை ரயிலில் இருந்த படியே வெளியே வீசுகின்றனர். இதனால் ரயில் நிலையத்திலும், ரயிலின் உள்ளேயும் குப்பை சேருகிறது. ஆனால், தற்போது அதற்கு எதிராக ரயில்வே கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 


ALSO READ| Indian Railways: 5 இலக்க ரயில் எண்ணில் புதைந்துள்ள தகவல்கள்!


இப்போது ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ரயில்வே வளாகத்தில் யாராவது அசுத்தம் செய்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதால், இனி குப்பைகளை பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.


ALSO READ | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!


ரயில்வே நிலையங்களின் தூய்மையை கருத்தில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அனைத்து ரயில் நிலைய பொறுப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனி ரயில் பாதைகள், நடைமேடைகள் போன்றவற்றில் பயணிகள் குப்பைகளை பரப்பினால் அல்லது அசுத்தம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணி ஒருவர் குப்பைகளை பரப்புவது கண்டறியப்பட்டால், அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். 


ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR